பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1146 ✽

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 பேசுவது அபூர்வமாயிருந்தது. தேடி அலைந்து விமான நிலையக் கூடத்தில் இங்கும் அங்கும் ஒடி, ஆங்கிலம் பேசுகிறவரைக் கண்டுபிடித்து, அப்புறம் அந்த நிலையத்தின் 'லெஃப்ட் லக்கேஜ் சாமான்களை விட்டுச் செல்லும் இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து, அரைவல் லவுன்ஜிற்கும் டிபார்ச்சர்லவுன்ஜிற்குமாக-எஸ்கலேட்டரில் ஏறி இறங்கிக் கடைசியாகச் சாமான்களை ஒப்படைத்து ரசீது பெற்றுக் கொண்ட போது, மணி பத்தே முக்கால். வியன்னாவில் தங்குவதற்கும், உபயோகிப்பதற்கும் தேவையான சாமான்களை ஒரு கைப்பையில் எடுத்துக் கொண்டாயிற்று.

விமான நிலைய வாயிலிலிருந்து புறப்படும் லக்சுரி கோச் நகர ஏர் டெர்மினல் ஆகியவை வியன்னா ஹில்டன் ஒட்டல் வரை போகிறதென்றும், அதில்போக ஐம்பது ஷில்லிங்ஆகும்என்றும், அதே விமானநிலையத்தின் கீழ்த்தளத்தில் இருந்து புறப்படும் அண்டர்கிரவுண்ட்ரயிலில் போக இருபத்து நாலுஷில்லிங் ஆகுமென்றும் தெரிந்தது. ஏறக்குறைய அப்போதே விமானநிலையம் வெறிச்சோடிப் போய்விட்டது.

பாதாள ரயிலில் போவதையே விரும்பினேன். காரணம், இருபத்தாறு ஷில்லிங் அந்நியச் செலாவணி மிச்சப்படும் என்பதுதான்!

விமான நிலையக் கூடத்திலிருந்தே கீழே இறங்கி, பாதாளரயில் பிளாட்பாரத்தில் கொண்டு போய்விடும். எஸ்கலேட்டரில் இறங்கிக் கீழே பார்த்தால் துணுக்கென்றது! ஜெகஜ்ஜோதியாக ஸோடியம் வேப்பர் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு ரயிலும் புறப்படுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது. ஆனால், பிளாட்பாரத்திலும் ரயிலுக்குள்ளேயும் ஈ காக்கை இல்லை. பயங்கர மெளனம். டிக்கெட் கவுண்டரில் மட்டும் ஒரே ஒரு நடுத்தர வயதுப் பெண் உட்கார்ந்திருந்தாள். அவளிடம் விசாரித்ததில் மழலை ஆங்கிலத்தில் பதில் கிடைத்தது. "ரயில் போகும். நீங்கள் விரும்பினால் டிக்கெட் தருகிறேன். ஏன் கூட்டமில்லை என்பதற்கெல்லாம் இப்போது நான் காரணம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பொதுவாக அகாலத்தில் கூட்டமே இராது. இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. கோச் எங்குமே நிற்காமல் நேரே சிட்டி ஏர் டெர்மினலுக்குப் போய்விடுவதால், பெரும்பாலான விமானப் பயணிகள் டாக்ஸிக்கு அடுத்தபடிகோச்சிலேயே போய்விடுவார்கள்.ஸப்வே ட்ரெயின் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்று எபிட்டி சென்ட்ரல் பகுதிக்குப் போய்ச் சேர அதிக நேரமாகும் என்பதால், பெரும்பாலோர் ரயிலில் போவதை விரும்பமாட்டார்கள்” என்றாள் அவள். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலுக்குப் போனேன். அடுத்தடுத்து இரண்டு மூன்று கோச்களில் ஏறி இறங்கியும், எந்தக் கோச்சிலும் ஆள் நடமாட்டமே இல்லை. பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய ரயிலில் நான் ஒரே ஒருவன் மட்டும் தானா பயணம் செய்யப் போகிறேன்? ஏறத்தாழ ஒன்பது பெட்டிகளுக்கு மேலுள்ள சுத்தமான அந்த அண்டர்கிரவுண்ட்ரயிலில்,தனியாகநான் ஒருவன்தான் பயணம் செய்யப் போகிறேன் என்றெண்ணியபோது, என்னவோ போலிருந்தது. யோசனையும் தயக்கமும் ஏற்பட்டன.

எதற்கும் மேலும் இரண்டொரு பெட்டிகளில் தேடிப் பார்க்கலாம் என்று, உள்ளேயே ஒரு கோச்சிலிருந்து இன்னொரு கோச்சிற்கு நடந்து போக வசதி