பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி 1 சந்தேகங்களின் முடிவில்.

  • 1147

 செய்யப்பட்டிருந்த அந்த ரயிலில் மேலும் முன்னோக்கி நடந்தேன். வெள்ளைக் குழல் விளக்குகளின் ஒளியில் ரெக்ஸைன் ஸீட்கள் காலியாக மின்னின.

கடைசியாக - அதாவது, ரயிலின் முன்பக்கத்திலிருந்து எண்ண ஆரம்பித்தால், முதல்கோச்சில் அவளைக் காண முடிந்தது. முதல் பார்வையிலேயே பழைய இத்தாலிய நடிகை ஜினாலோலா பிரிகிடாவை அவளது இளம் வயதில் பார்த்தாற்போன்ற தோற்றத்தோடு அவள் தென்பட்டாள்.

ஒரிரு நிமிடங்கள் தயங்கிய பிறகு, "டு யூ ஸ்பீக் இங்கிலீஷ்?” என்று நான் கேட்டவுடன், 'எஸ்' என்று முகமலர்ந்தாள். அப்பாடா! நாற்பது ஐம்பது நிமிடங்கள் போரடிக்கிற தனிமையில் பயணம் செய்ய நேராமல் ஒரு துணையாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டன. கட்டழகு மையங்கள் விட்டுத் தெரிகிற வகையில் சம்மர் டிரஸ்ஸில் இருந்தாள் அவள். நேரடியாகப் பார்ப்பதற்குத் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தது. ரயில் புறப்பட்டது. மணி பதினொன்றே கால். அவள் தன் கையிலிருந்த புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு “நீங்கள் டுரிஸ்டா? எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த நள்ளிரவில் ரயில்பெட்டியில் தன்னந்தனியாக வந்து அமர்ந்திருந்த அழகுத் தேவதையாக ஜொலித்தாள் அவள். நான் அவளுக்குப் பதில் சொன்னேன்.மேலும் உற்சாகமாக எதிர் ஸீட்டில் என்னருகே வந்து உட்கார்ந்து சிரித்துப் பேச ஆரம்பித்தாள் அவள். தன் பெயர் அங்கெலிகா என்று அறிமுகமும் செய்து கொண்டாள். வெண்ணெய் திரண்டாற் போன்ற அவள் மேனி நிறமும், திரட்சியும் வளமும் மினுமினுக்கும் கட்டழகும், இளமையும் மருளச் செய்தன. அந்த உடலிலிருந்து கிளர்ந்த மெல்லிய மயக்கும் தன்மை வாய்ந்ததொரு பெர்ஃப்யூம் என்னை வசப்படுத்தியது. அழகிய வசீகரமான கண்கள், சொக்க வைக்கும் பல் வரிசை, மயக்கும் சிரிப்பு, சிவந்த செந்நிற உதடுகள். அவள் என்னைக் கேட்டாள்:

“வியன்னாவில் எங்கே தங்கப் போகிறீர்கள்?”

“அது ஒன்றும் பிரச்னை இல்லை. பாரிஸிலிருந்தே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மூலம் ஒரு ஒட்டலில் இடம் ரிஸர்வ் செய்திருக்கிறேன்.” -

“அது சரி! எந்த ஒட்டல் என்று தெரிந்தால்தானே போவதற்கு வழி சொல்ல முடியும்? ஒருவேளை வியன்னா சென்ட்ரலில் இறங்கி வேறு ரயில் மாற வேண்டியிருக்கலாம். அல்லது பஸ் பிடிக்க வேண்டியிருக்கலாம்.”

"ஒட்டல் நாய்பவ். நியுஸ் டிஃப்ட்காஸே - வியன்னா4.”

"அது ஏன் இந்த ஒட்டலை ஏற்பாடு செய்தீர்கள்?

"என்னுடைய பட்ஜெட்டுக்கு இதுதான் முடியும்.”

“அதற்காகச் சொல்லவில்லை. இப்போதே மணி பதினொன்றரைக்கு மேல் ஆகிவிட்டது. ரயிலிலிருந்து இறங்கி இந்த ஒட்டல் உள்ள தொலைவுவரை பஸ்ஸில் போக பஸ் இராது. டாக்ஸியில் போனால் ஒட்டல் வாடகையைவிட அதிகமாக டாக்ஸிக்கே செலவாகிவிடும். நாளை விடிந்ததும் ஊர் சுற்றிப்பார்ப்பதற்காக மறுபடி