பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி சந்தேகங்களின் முடிவில். *

1149


அவள் சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, என்னிடமும் புன்முறுவலோடு சிகரெட் பெட்டியை நீட்டினாள்.

"நோ.தேங்க்ஸ்” என்று நான் மறுத்தேன்.அவள் பக்கத்திலிருந்த புத்தகத்தின்மேல் அப்போதுதான் என்பார்வை சென்றது. முக்கால் நிர்வாணக் கோலத்தில் ஓர் அழகிய இளம்பெண், ஒர் ஆணுக்கு மஸாஜ் செய்வதுபோல் அட்டையில் ஒரு படம் ஹெள டு ஸெட்யூஸ் மென்? ஆண்களை மயக்குவது எப்படி? என்று தலைப்பு.

நிச்சயமாக இவள் பாஸ்டின் ராய்ஸ் எச்சரித்த மாதிரி ஆண்களை மயக்கிப் பணம் பறிக்கும் சாகஸக்காரியாகத்தான் இருக்க வேண்டும். இவளிடம் ஜாக்கிரதை தேவை என்று உள்மனம் என்னை எச்சரிக்க ஆரம்பித்திருந்தது. இவளைப் பார்த்தால் உள்ளுர்க்காரி மாதிரித்தான் தெரிகிறது. ஆனால், தானும் அதே ஒட்டலில் தங்கப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஒட்டலின் பெயரைச் சொல்லி, அதில் தன் சிநேகிதி மானேஜராயிருப்பதால், நானும் அங்கேயே தங்க வேண்டுமென்கிறாள். இதெல்லாம் என்ன சூழ்ச்சியோ’ என்று உள்ளம் மிரண்டது. மறுபடி அவளே பேசினாள்:

“நான் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள். உங்கள் நாட்டில் நிறைய ரோமன் கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாமே, கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்ன மதம்?”

“உண்மைதான். எங்கள் நாட்டில் நிறைய ரோமன் கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் ஒருவனில்லை, இந்து”

"அப்படியா? மிஸ்டர் காந்தியும் ஒரு இந்துவாகத்தானே இருந்தார்”

"ஆனால், சர்வமத சமரச நோக்கில் காந்தி மிகவும் நம்பிக்கைக் கொண்டு பாடுபட்டார்” “நான் ‘காந்தி படம் பார்த்தேன்.” ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. அவசர அவசரமாக வெளியே எட்டிப் பார்த்த அவள், “வாருங்கள்! நாம் இங்கேதான் இறங்க வேண்டும்” என்று எழுந்திருந்தாள். நானும் எழுந்து அவளைப் பின் தொடர்ந்தேன்.

கீழே இறங்கியதும் அவள் தன் கைப்பையிலிருந்து ரோடு மேப் ஒன்றை எடுத்து என்னிடம் காண்பித்து, "இதோ பாருங்கள். நீங்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மூலம் ரிஸர்வ் செய்திருக்கும் ஒட்டல் நாய்பவி போவதாயிருந்தால் இவ்வளவு தூரம் இங்கிருந்து டாக்ஸியில் போக வேண்டியிருக்கும்.மொழியும் இடமும் தெரியாத இந்த அந்நிய நாட்டில் அப்படித் தனியே உங்களால் போக முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்வதற்கு விட்டுவிடுகிறேன். நான் இங்கிருந்தே என் தோழியின் ஒட்டலுக்குப் போகப் போகிறேன். எனக்குச் சொந்த ஊர் லின்ஸ். பக்கத்தில் தான் இருக்கிறது. வருடத்தில் குறைந்தபட்சம் நூறு தடவையர்வது வியன்னா வருகிறேன். ஒவ்வொரு முறையும் நான் என் சிநேகிதி பணிபுரியும் இதே ஒட்டலில்தான் தங்குவது வழக்கம். நான் சிபாரிசு செய்வதனால் என் சிநேகிதி மிகக் குறைந்த ೧7-556ು உங்களுக்கும் ரூம் தருவாள்' என்றாள்.