பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி சந்தேகங்களின் முடிவில்.

  • 1151

 நான் பதில் சொல்லாமல் அவளை ஏறிட்டுப்பார்த்துச் சிரித்தேன். பெண்ணே நீ என்னை அத்தனை சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். “புழுக்கமாயிருக்கிறது.நல்ல கோடை இரவு. இந்த உல்லன் கோட்டை வேறு ஏன் சமக்கிறீர்கள்? விடுங்கள். கழற்றி நான் கையில் வைத்துக் கொள்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே, அப்படியே தழுவுவதுபோல் என்னை நெருங்கி, எனது கோட்டைக் கழற்ற முயன்றாள் அங்கெலிகா. உண்மையில் மிகவும் புழுக்கமாக இருந்தும், "பரவாயில்லை, ஒட்டலுக்குப் போனபின் கழற்றத் தானே போகிறேன்.” என்று சமாளித்து, அப்போதைக்கு அவளைத் தடுத்தேன். கோட் பாக்கெட்டிலேயே குறியாக இருக்கிறாள் போலும் என்று என் சந்தேகமும் வலுப்பட்டது.

நான் குடிக்க மறுக்கவே, திறந்துவிட்ட இரண்டு பீர்கேன்களையும் அவளே பருக வேண்டியதாயிற்று. வெறிச்சோடிப் போய் ஆளரவமற்ற தெருக்களில் நடந்து நடந்து, கடைசியாக 'ஒட்டல் பித்தோவன் வாயிலில் போய் நின்றோம். அதுதான் அவள் தோழியின் ஒட்டலாம்! புகழ்பெற்ற ஜெர்மானிய இசைவாணரின் பெயரில் அமைந்திருந்தது. -

ஒட்டலை மூடியிருந்தார்கள். அங்கெலிகா காலிங்பெல்லை அழுத்தினாள். கதவுகள் திறக்கப்பட்டன. அங்கெலிகாவின் தோழிதான் வந்து திறந்தாள்.

“ஹாய்...அங்கெலிகா.வெல்கம்! லின்ஸிலிருந்து புறப்படுமுன் வழக்கமாக டெலிபோன் செய்வாயே. இம்முறை ஏன் மறந்துவிட்டாய்”

‘முடியவில்லை! இதோ என் இந்திய நண்பர். வழியில் ரயிலில் சந்தித்தேன், கிஸ்லா வேறு ஏதோ ஒட்டலில் தங்க இருந்த இவரை இங்கு அழைத்து வந்தேன்!” அறிமுகம் நடந்தது. கிஸ்லா என்னோடு கைகுலுக்கினாள். -

“நன்றி. அங்கெலிகா. சரியான டுரிஸ்ட் மாதம். நீயும் முன் தகவல் சொல்லாமல் வந்துவிட்டாய். இங்கு அறையே காலி இல்லை. என் அறையில் நீ ஒருத்தி தங்கிக் கொள்ளலாம். உனக்கே தெரியும். அங்கே இரண்டு படுக்கைகள்தான் உண்டு.”

“ஐயையோ! இவர் ஏற்கனவே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மூலம் ரிஸர்வ் செய்திருந்த ஒட்டலுக்குப் போகவிடாமல் தடுத்து இவரை இங்கு அழைத்து வந்தேனே. என்ன செய்வது?” * அவர்கள் இருவரும் சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்கள். “ஒரு காரியம் செய்யலாம் அங்கெலிகா இவர் நமது விருந்தினர். நம்மால் இவருக்கு அசெளகரியம் நேர விடக்கூடாது. இவருக்கு ஒரு டாக்ஸி வரவழைத்து, இவரை ஏற்கனவே ரிஸர்வ் செய்தபடி நாய்பவ் ஒட்டலுக்கே அனுப்பிவிடலாமே? இவரை ஏன் சிரமப்பட விட வேண்டும்?” o

‘'வேண்டாம் கிஸ்லா! எனக்காக நீ கொஞ்சம் அசெளகரியத்தைப் பங்கிட்டுக் - கொண்டாலே போதுமானது. இந்த அகாலத்தில் இவரைத் தனியே டாக்ஸியில் அவ்வளவு தூரம் போகச் சொல்லித் துரத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. உன்