பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1152 🞸

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அறையில் ஒரு கட்டிலை நீயும், நானும் பகிர்ந்து கொள்வோம். இன்னொன்றில் இவர் உறங்கட்டும்.” "இவர் அதை அசெளகரியமாக நினைக்காத பட்சத்தில் எனக்கு ஆட்சேபணை இல்லை அங்கெலிகா தங்கிக் கொள்ளட்டும்!” என்றாள் கிஸ்லா. பேருக்கு ஒட்டல் லெட்ஜரில் எனது பாஸ்போர்ட் எண் முகவரி குறித்தாள். ‘என்னிடமிருக்கும் பணத்தைப் பறிக்க இரண்டு பேருமாகச் சேர்ந்து நாடகமாடுகிறார்களோ என்று நான் சந்தேகப்பட்டுப் பயந்தேன். உடனே அவசர அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னேன்.

“தயவு செய்து ஒரு டாக்ஸி மட்டும் ஏற்பாடு செய்து கொடுங்கள், போதும். உங்களுக்குச் சிரமம் வேண்டாம்! நான் ஏற்கனவே ரிசர்வ் செய்த ஒட்டலுக்கே போய்விடுகிறேன்.”

“இல்லை! நான் இந்த அகாலத்தில் உங்களை அதற்கு அனுமதிக்கமாட்டேன். ரிஸ்க்' என்றாள் கிஸ்லா. சொல்லிவிட்டு, உடனே ஒட்டல் நாய்பவ்”வுக்கு ஃபோன் செய்து என் அக்காமடேஷனைக் கேன்ஸல் செய்யுமாறு கூறியும் முடித்துவிட்டாள்.

‘ரிஸ்க் என்ன ரிஸ்க்? உங்களிடம் பறிகொடுக்கப் போவதை அங்கே தெருவில் யாரிடமாவது பறிகொடுக்கப் போகிறேன். அவ்வளவுதானே?’ என்று என் மனம் நினைத்தது. "பறி கொடுப்பதைப் பெண்களிடமா பறி கொடுக்க வேண்டும்?’ என்று மனம் என்னையே ஏளனம் செய்யவும் தொடங்கியது. உடனே கிஸ்லா அந்த அழகிய சுத்தமான அறையைத் திறந்து ஒரு கட்டிலை எனக்காக ஒழித்துவிட்டாள். அறையின் கோட்ஸ்டாண்ட் மற்றொரு கட்டிலருகேஅதாவது, அங்கெலிகாவும் - கிஸ்லாவும் படுத்துக் கொள்வதற்கு இருந்த கட்டிலருகே இருந்ததனால், எனது கோட்டை நான் அங்கே மாட்டத்துணியவில்லை. என்படுக்கை மெத்தையில் தலையணை அருகிலேயே மடித்து வைத்துக் கொண்டேன். அம்மாதிரி வைத்துக் கொள்வதானால் கோட்டில் மடிப்பும், சுருக்கமும் விழும் என்றாலும் பரவாயில்லை. பாக்கெட்டில் இருக்கிற பணம் பிழைத்தால் போதும் என்ற பாதுகாப்பு உணர்வே அப்படிச் செய்யத் துண்டியது.

பத்து இருபது நிமிஷம் கழித்து அங்கெலிகா வந்து டின்னருக்கு அழைத்தாள். மறுபடியும் என்னுள் சந்தேகம்.

'சாப்பாட்டில் ஏதாவது கலந்து வைத்து விடுவார்களோ?

"ஜூரிச்சிலிருந்து வியன்னா வரும்போது ஆஸ்டிரியன் ஏர்வேஸ் ஃபிளைட்டில் கொடுத்த உணவே அதிகம். மறுபடி எனக்குப் பசிக்கவில்லை” என்று பிடிவாதமாகச் சொன்னேன். . அங்கெலிகா என்னை உற்றுப் பார்த்துச் சிரித்தாள்.

"நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! பயமும் கூச்சமும் சந்தேகமும் உங்களைப்பொய் சொல்லத் தூண்டுகின்றன. ஆஸ்திரியன் ஏர்வேஸ் ஃபிளைட்டில் என்ன