பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1154 🞸

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 பெண்பிள்ளைகள் வஞ்சகமாக நம்மை ஏமாற்றிவிட்டார்களே என்றெண்ணியபோது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

குளியலறையில் போய்ப் பல் துலக்கி முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ஒட்டல் ரிஸப்ஷனுக்குச் சென்றேன்.அங்கெலிகாவைக் காணவில்லை. கிஸ்லா மட்டும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

செய்கிற திருட்டைத் திட்டமிட்டு இரண்டு பெண்களுமாகச் சேர்ந்து செய்துவிட்டு, ஒருத்தி எங்கோ போய்விட்டாள். இன்னொருத்தி, இந்தப் பூனையும் இந்தப் பாலைக்குடிக்குமா? என்பதுபோல் பரமசாதுவாக உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள்!"

எனக்கு ஒரே கோபம். நேரே ரிஸப்ஷன் கவுண்ட்டர் எதிரே போய் நின்றேன்.

கிஸ்லா தலை நிமிர்ந்தாள். புன்முறுவலோடு, “குட்மார்னிங்! நன்றாக உறங்கினர்களா?” என்று கேட்ட அவளிடம் பதிலுக்கு நன்றியோ, குட்மார்னிங்கோ கூறாமலே, “என் கோட்டைக் காணவில்லை. படுக்கையில் என்னருகில் வைத்துக் கொண்டிருந்த கோட் எப்படிக் காணாமல் போக முடியும்? யாரோ எடுத்திருக்கிறார்கள்” என்று கடுமையாகப் புகார் கூறுகிற தொனியில் ஆரம்பித்தேன்.

“யாரும் எடுக்கவில்லை! ராத்திரி உங்கள் கோட் படுக்கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து சுருக்கமும் மடிப்புமாகக் கிடந்தது. அங்கெலிகாதான். முதலில் அதைப் பார்த்து எடுத்து என்னிடம் கொடுத்தாள். இதை நன்றாகச் சுத்தம் செய்து அயர்ன் பண்ணி இவரிடம் கொடு என்றாள். இரவு இரண்டரை மணி சுமாருக்கு அவளுக்கு லின்ஸில் இருந்து போன் வந்தது. அவளுடைய வயதான தந்தைக்கு உடல் நிலை மிகவும் சீரியஸ்ஸாகி இருப்பதாகவும், அவள் உடன் தேவை என்றும் கூறி, அவளை உடனே புறப்பட்டு வரச் சொன்னார்கள். வேறு வழியில்லை. அவள் போக வேண்டியிருந்தது. பாவம் பெரிய பணக்காரக் குடும்பத்துப் பெண். அவள் தந்தைக்கு ஸின்ஸில் இரண்டு பெரிய ப்ருவரி (பீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. எங்களுடையதற்கும் வேறு பல ஒட்டல்களுக்கும் அவர்கள் ப்ருவரிதான் பீர் சப்ளை செய்கிறது. வியாபார விஷயமாக அடிக்கடிவியன்னா வருவாள்.தந்தைக்கு இவள் ஒரே பெண் இரண்டு மூன்று வருஷங்களாகத் தொழிற்சாலை நிர்வாகத்தை இவள்தான் கவனித்து வருகிறாள். தாயை இழந்து பல வருஷங்கள் ஆகின்றன. உங்களிடம் சொல்லாமல் போக நேர்வதற்காக வருந்தினாள். உங்களிடம் தந்துவிடச் சொல்லி ஓர் உறையைத் தந்து விட்டுப் போயிருக்கிறாள்.”

என்று கூறி, சுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைத்திருந்த என் கோட்டையும், அதனுள்ளிருந்த மற்றவற்றையும் என்னிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தாள் கிஸ்லா. சரிபார்த்ததில், எல்லாம் நான் வைத்தபடி இருந்தன. எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. . .

"போய் பிரேக்ஃபாஸ்டை முடியுங்கள்! கீழே பேஸ்மண்ட்டில் டைனிங் ஹால் இருக்கிறது. காலை ஒன்பது மணிக்குப் புறப்படும் ஸிடிரமா டுரிஸ்ட் கோச்சில்