பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1158

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


சினிமா இதழ்களையும் அதிகமாக இலட்சியம் செய்து படிக்கிற பழக்கமும் எனக்குக் கிடையாது. அந்த வகையில் நான் ஒரு ஞான சூன்யம்

அதனால் முத்துரங்கம் ஏற்கனவே நடித்ததாகக் கூறிய பழைய படங்களையும் நான் பார்த்திருக்கவில்லை. நடிக்கப் போகிற புதிய படங்களையும் பார்க்க. நேரப் போவதில்லை. ஆனால், மனிதர் ஏன் கொஞ்சமும் சுயமரியாதையோ மானரோஷமோ இன்றித் தெருவில் பிச்சைக்கு அலைகிறார் என்று வியப்பும் ஆத்திரமும் அடைந்தேன். ஒருவேளை பல சினிமாக்காரர்கள், நாடக நடிகர்களைப்போல் இவருக்கும் இரண்டு மூன்று சம்சாரங்களும் ஏகப்பட்ட குழந்தை குட்டிகளும் இருக்குமோ? அவர் மேல் பரிதாபமாகவும் இருந்தது, ஆத்திரமகவும் இருந்தது.

அந்த அந்த நேரங்களில் முத்துரங்கம் என்னைப் பற்றி நல்லதாக இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து சொல்லிவிட்டு ஏதாவது கேட்டால், தட்டாமல் உதவி வந்தேன். பலவீனந்தான்! கடவுளே தோத்திரபிரியர் என்கிறார்கள். பாமர மனிதனான நான் எந்த மட்டும்

மூன்றாவது முறையாக ஆடிக் கிருத்திகைத் தினத்தன்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாளிலோ, சரியாக ஞாபகம் இல்லை. அதிகாலையிலிருந்து விரதமிருந்து அன்று மாலை பட்டினியோடு வடபழநி கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நாள் முழுவதும் பசியாயிருந்தது. திரும்பும்போது ஒர் ஒட்டலில் புகுந்து இட்லி வடைக்கு ஆர்டர் சொல்லிவிட்டுக் காத்திருந்தபோது முத்துரங்கம், திடீரென்று உதயமாகி எதிர் நாற்காலியில் உட்கார்ந்தார்.

“முந்தாநாள் ராஜாஜி ஹால்லே பாரதி விழாவிலே பிரமாதமாப் பேசினிங்க. 'பாரதியைக் காலச் சிமிழில் அடைக்க முடியாது. அவன் நம் தலைமுறைக்கு மட்டுமின்றி வரப் போகிற பல தலைமுறைகளுக்கும் யுகபுருஷனாக விளங்குவான்’னு நீங்க வெண்கலக் குரல்லே முழங்கினப்போ கிளம்பின கரகோஷத்திலே இரண்டு கைகள் என்னோடது ஸார்”

“பாரதி விழாவுக்கு நீர் வந்திருந்தீரா?” - "

அண்ணா பேசறதா தெரிஞ்சதும் நான் எப்பிடி வராம இருக்க முடியும்?”

"இன்னும் ஒரு பிளேட் இட்லி வடை கொண்டு வாப்பா” என்று நானே முந்திக் கொண்டு முத்துரங்கத்துக்காகவும் சேர்த்து ஆர்டர் செய்தேன்.

இட்லிவடையைச் சாப்பிட்டுக்கொண்டே."இந்தஹோட்டல்லேநெய்ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்” என்று என்னிடம் புகழ்ந்துவிட்டு, ஸர்வரைக் கூப்பிட்டு இரண்டு நெய்ரோஸ்ட்டுக்கும் ஆர்டரும் கொடுத்துவிட்டார் முத்துரங்கம்.

சாப்பிட்டு முடித்ததும் பன்னிரண்டு ரூபாய் எண்பது காசு பில் கொடுத்தேன். என்னிடம் இருந்ததே பதினைந்து ரூபாய்தான்.

"அண்ணா மன்னிக்கனும்: உங்ககிட்ட ரெண்டு வார்த்தை நின்னு பேசக்கூட எனக்கு இப்ப நேரம் இல்லே, மூவிடோன் ஸ்டுடியோவில் ரஜனி சாரோட ஒரு ரோல்