பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1164 🞸நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 வானின் ஒரு கோடியில் சாயம் பூசினாற்போல் தெரியும் மங்கலான வானவில், நீலவானின் இளம்பிறை, காலைக் கதிரவன், மலரும் ஏதாவதொரு புதுமலர், முளைக்கும் ஏதாவதொரு புதிய செடி எல்லாமே அதிசயம்தான் அவருக்கு அப்படி அவர் வியந்து முகம்மலரச் சிரிக்கும்போது எழுபத்து மூன்று வயது மூப்பிலிருந்தா இந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும் என்று நம்ப முடியாமலிருக்கும் அவரது உற்சாகமும் புத்துணர்ச்சியும்.

அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பதாக வந்த தந்தியை அவன் சைக்கிளில் ஒடிப்போய் கொடுத்தபோது ரோஜாப்பதியன்களுக்குத் தண்ணிர் ஊற்றிக் கொண்டிருந்த அவர், "இரு இந்தக் கடைசிச் செடிக்கும் தண்ணிர் விட்டபின் வருகிறேன்” என்றார்.

ஒரு பூவுக்கும், செடிக்கும் வியக்கிறவர் ஒரு பெரிய தேசிய கெளரவம் தன்னைத் தேடி வந்ததற்காகச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் சுபாவமாயிருந்தது. குமரகுருவுக்குப் பெரிதும் வியப்பை அளித்தது.

அவ்வளவு பெரிய நாடறிந்த மகாகவிக்குக் கர்வம் என்பதே என்னவென்று தெரியாது. தபால்கார இளைஞன் குரு எப்போதாவது அவரிடம் நீட்டும் கவிதைகளைப் படித்துத் திருத்தங்கள் செய்து கொடுத்துப் பாராட்டுவார்.

'எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் எத்தனை வயதானாலும் மனசை மட்டும் மூப்படைய விட்டுவிடாதே. நீ மிகச் சிறந்த கவிஞனாக வரலாம். பழியாலும் மூப்படையாதே புகழாலும் மூப்படையாதே' - என்றார்.

"பூப்பூவாய்ப் பூத்திந்தப்
பூமி சிரிக்குதப்பா!
பாப்பாவாய்ப் பாடியதைப்
பரவும் வகையறியாமல்
மூப்பாலே சோர்ந்திருந்தார்
மூடமனிதர் வீழ்ந்திருந்தார்
சாப்பாட்டு ராமர்களே -
சரணடைவீர் இயற்கையிலே"

-

என்று மகாகவி இயற்றியிருக்கும், பூமியின் புன்னகை என்ற தலைப்பிலான கவிதைகளில் ஒன்றை நினைத்துக்கொள்வான் குமரகுரு பூங்குன்றத்தின் அமைதியில் மூழ்கி விளம்பரமில்லாமல் தம் வாழ்வின் இறுதிப் பகுதியைக் கழித்து வந்தாலும் உலகம் அவரை அவ்வளவு சுலபத்தில் மறந்து விடவில்லை. அதிகமான பொருளாதார வசதி என்றும் சொல்ல முடியாது. பயங்கர வறுமை என்றும் கூற முடியாது. விற்கும் புத்தகங்களின் ராயல்டி வருமானத்தில் எளிய கிராம வாழ்வு நடத்தி வந்தார் மகாகவி,

அந்த ஆண்டு நல்ல அடைமழைக் காலம் தொடங்கியிருந்தது. மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்த ஒரு முன்னிரவில் மேல நல்லூர் அஞ்சல் அலுவலகத்தின் தந்திக் குமாஸ்தா, "அப்பா குமரகுரு உங்க ஆளு.அதான் அந்தக்