பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி

ஒருகவியின்உள்உலகங்கள்

  • 1165

 கவிஞருக்குப் பம்பாயிலிருந்து ஒரு தந்தி வந்திருக்குப்பா. காவியபீடம்"கிற அகில இந்திய இலக்கிய ஸ்தாபனம், அவருடைய கவிதைப் பணிக்காக இந்த வருஷ விருதையும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்தையும் அவருக்கு வழங்க முடிவு பண்ணியிருக்கு. அதைப் பத்தின தந்தி இது எப்படி இந்த அடைமழையிலே போய்க் குடுக்கப் போறே. பூங்குன்றத்துக்குப் போற வழியெல்லாம் ஒரே காட்டாறு. பயங்கர வெள்ளமா இருக்குமே இப்போ” என்றார்.

“இது ரொம்ப மகிழ்ச்சிகரமான சமாசாரம் எப்படியும் போய்த் தந்தியைக் குடுத்தாகனும் சார்.

“சும்மா கர்மயோகி மாதிரித் தந்தியைக் கொடுத்திட்டு வந்திடாதே. முழுசா ஒரு நூறு ரூபாயாவது இனாம் வாங்கியாகணும். அத்தனை அதிர்ஷ்டமான சேதி இது.”

குமரகுரு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான். ஒரே ஆனந்தம். தந்தியை நனைந்துவிடாமல் ஒரு பாலிதின் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, அந்த அடை மழையிலேயே அவரைப் பார்த்து எப்படியும் தந்தியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கிளம்பினான். தந்தி குமாஸ்தா கூறியதுபோல் நூறுரூபாய் இனாமுக்காக அல்ல, அந்த மகாகவியின் முகத்தில் ஒரு மலர்ச்சியைப் பார்ப்பதற்காக. அந்த மலர்ச்சியே பல நூறு ரூபாய் இனாமுக்குச் சமம் என்ற மனநிறைவோடு புறப்பட்டிருந்தான் அவன். இருட்டியபின் காட்டு வழியாகப் பூங்குன்றம் போகவே பயப்படுவார்கள். வனவிலங்குகளின் அட்டகாசம் ஒருபுறம், மழைக் கொடுமை மற்றொரு புறம் துணிந்து பூங்குன்றத்தையும் பிரதான நிலப்பகுதியையும் பிரிக்கும் காட்டாறு வரை சைக்கிளில் போய்ச்சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நீந்திப் போய் தந்தியை அவரிடம் அக்கரையில் சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியிருந்தான் குமரகுரு மின்சாரமும், டெலிபோனும் நுழையாத மலையடி வாரத்துக் கிராமமான பூங்குன்றத்தை விரும்பி அதில் வந்து தங்கியிருந்த அந்த மகாகவிக்கு அவன் போய்த் தந்தியைக் கொடுக்காவிட்டால் அந்த இனிய செய்தியே தெரியமுடியாது. வேறு உலகத் தொடர்பே அக்கிராமத்துக்குக் கிடையாது.

குமரகுரு காட்டாற்றின் கரையை அடைந்தபோதே இரவு எட்டேமுக்கால் மணி இருக்கும். தற்செயலாக மழை கொஞ்சம் தணிந்திருந்தது. எப்படியும் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முடியாது. ஆற்றின் இக்கரையையும், அக்கரையையும் இணைத்த கல்பாலம் தணிவானது.அந்தக் கல்பாலத்தின் கீழே அங்கங்கே இருந்த மதகுக் கண்கள் தவிரப் பாலத்தை மீறி அதற்கு மேலேயும் ஒரடித் தண்ணீர் ஓடியது. பாதிப் போய்க் கொண்டிருக்கும் போதே நீரோட்டம் வேகம் அதிகரித்துவிட்டால் சைக்கிள் ஆற்றோடு போய்விடும்.நடந்து போனால் இருபுறமும் இருந்த கருங்கல் துண்களைப் பற்றிப் பற்றி எப்படியாவது அக்கரையை அடைந்து விடலாம்.

இக்கரையிலிருந்த ஒரு பாழ் மண்டபத்து முகப்பில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் தந்தியுடன் ஆற்றைக் கடக்கத் தொடங்கினான் குமரகுரு வேகமும், இழுப்பும் அதிகமாக இருந்த இடங்களில் கல்தூண்களைப் பிடித்து சமாளித்துச்