பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி/அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான் ✽ 1173

 யாருமே தொடக்கூட இல்லை. எண்ணெய் ஆகாது என்றார்கள். மாவுப் பண்டம் ஒத்துக் கொள்ளாது என்றார்கள்.

“இந்தத் தள்ளாத வயசிலே எங்களை வழியனுப்பவிமானநிலையத்துக்கு நீங்க வர வேண்டாம்! நாங்களே போய்க் கொள்கிறோம். நீங்க ரயிலடிக்குப் போங்கோ அடுத்த வருஷம் டெல்லியிலே ஒரு ஸெமினாருக்காக நான் மட்டும் தனியா வருவேன். அந்த ட்ரிப்பின்போது நானே வரகுப்பட்டிக்கு வந்து ரெண்டு நாள் உங்களோட தங்கறேன்” - என்று மகன் அவருக்கு விடைகொடுத்தான்.

மருமகளும் பேரனும் அதிகம் பேசவே இல்லை.'புறப்படு முன்பேரனின் தலையை உச்சி மோந்து அவனைத் தழுவிக் கொள்ளலாம் என்று துணிந்து அவனருகில் நெருங்கிய அவரைக் கண்டு மிரண்டு, “டோண்ட் டச் மீ யூ புல் ஷிட்” என்று கத்தியபடியே விலகி ஓடினான் பேரன். -

“வேண்டாம்ப்பா இதெல்லாம் அவனுக்குப் புரியாது. விட்டுடுங்கோ” என்று - கனகசபையே அவரை விலக்கினான்.

கிழவர் மறுபடி ஒரு ரிக்ஷா பிடித்து அதே மூட்டை முடிச்சுக்கள் சம்புடத்தோடு எழும்பூர் வந்தார். இரயிலுக்கு நிறைய நேரம் இருந்தது. இரவு 9 மணிக்குத்தான் அவருக்கு இரயில், - - ஸ்டேஷனுக்காகப் படியேறுகிற இடத்தில் சுருண்ட தலை முடியும், அழகிய கண்களும் மேலே சட்டையணியாத திறந்த உடம்புமாக ஒரு சிறுவன்,"தாத்தா இந்த மூட்டையை நான் தூக்கியாறேன், நாலணாக் குடுங்க போதும்” என்று அவரைக் கெஞ்சாத குறையாக மன்றாடினான்.

"தாத்தா என்ற அந்த அழைப்பு நெஞ்சில் பட்டு ரோஜாவால் அர்ச்சித்த மாதிரி மிருதுவாக இருந்தது.கிழவர் அழுக்கும் கிழிசலுமான அரை டிராயர் அணிந்த அந்தச் சிறுவனையே இமையாமல் உற்றுப் பார்த்தார். - . “என்ன தாத்தா! அப்பிடிப் பார்க்கிறீங்க. நான் லைசென்ஸ் உள்ள போர்ட்டர் இல்லே. எங்கிட்டே வில்லை கிடையாது. 'வில்லை' உள்ள லைசென்ஸ் போர்ட்டர்னா உங்ககிட்டரெண்டு ரூபா கேப்பானுக. நான் வெறும் நாலணாத்தான் கேட்கிறேன்.” “எங்கிட்ட அதிகச் சுமையே இல்லையேப்பா?” "இருக்கிறதைக் கொண்டாந்து தாரேன் தாத்தா?”

அவன் ஒவ்வொரு முறை தாத்தா என்று கூப்பிடும்போதும் அவருடைய சுமைகள் மேலும் மேலும் குறைந்து லேசானது போலிருந்தது. :- - .

கிழவரின் கண்களிலோ நீர் பனித்தது. கீழே உட்கார்ந்து சம்புட்த்தைத் திறந்தார். . அப்படியே சிறுவனிடம் நீட்டினார்.