பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / களவும் கற்று. * 1177

பாத்திரமாக நடந்து தொடர்ந்து நல்ல பெயர் எடுக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடத்த வேண்டும் சாராய வெள்ளத்தைத் தடுக்க வேண்டும். எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.”

“அது மட்டுமில்லை புலவரே! எங்கள் தேர்தல் மேடைகளில் நாங்கள் பேசினாற் போலவே எளிமையையும் சிக்கனத்தையும் கடைப்பிடிக்கக் கருதி இனி மந்திரிகள் ஐநூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க மாட்டோம். சைக்கிளில்தான் அமைச்சரவைக்கும் அலுவலகங்களுக்கும் செல்வோம். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பால், குடிசைகளுக்கு இலவச மின்சாரம், குறைந்த சம்பளக்காரர்களுக்கு இலவச வீடுகள், ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி எல்லாம் தரப்போகிறோம்.”

புலவர் இதைக் கேட்டு விட்டுச் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள் புலவரே?”

"வேறொன்றுமில்லை! விளிம்பில் நிற்கிற யாருக்கும் கால் இடறும் ரொம்ப யோக்கியமாக இருப்பது என்பது திடீரென்று விளிம்பில் ஓடிவந்து நிற்கிற மாதிரித்தான். ஏற்கனவே ஆண்டவன் ரொம்ப அயோக்கியத்தனமாயிருப்பது என்ற மற்றொரு விளிம்பில் இருந்தான். விழுந்தான். அதிலிருந்து நீங்கள் இன்னொரு விளிம்பிற்கு ஒரே தாவாகத் தாவி இடறி விழுந்து விடாமல் படிப்படியாக நல்லதுகளைச் செய்யத் தொடங்கினாலே போதுமானது. பிரமாதமாக ஆரம்பித்து மிகவும் சுமராக முடிந்துவிடக் கூடாது. சுமாராக ஆரம்பித்து மிகவும் பிரமாதமாக முடியலாம். தவறில்லை”

“நீங்கள் எங்களை நம்பவில்லை புலவரே! போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்.”

சரி, பார்க்கலாம்' என்றார்.

கண்ணப்பன் சொன்னபடியே நடந்தது. மந்திரிகள் சைக்கிளில் போனார்கள். வெறும் ஐநூறு ரூபாய்தான் சம்பளம் வாங்கினார்கள். இலவச மின்சாரம், இலவசப் பால், இலவச உணவு, இலவச உடை எல்லாம் தடபுடல் பட்டது.

இடையே மரூஷியஸ் தீவுகளில் உள்ள தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்கப் பொருத்தமான ஒர் ஆசிரியர் வேண்டும் என்று கல்வி இலாகா தேடியது. புலவரையே அனுப்பலாம் என்றார் முதலமைச்சர் கண்ணப்பன். புலவரும் அதற்கு இசைந்தார். ஒர் ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் புலவர் மரூஷியஸ் செல்ல நேர்ந்தது. கண்ணப்பனே புலவருக்கு ஒரு பிரமாதமான வழியனுப்பு உபசாரவிழா நடத்தி ஆளுயர மாலை போட்டு அவரை அனுப்பி வைத்தான். புலவர் வெளிநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.

கண்ணப்பனின் ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் எல்லாம் சுமுகமாகவே நடந்தன. புதிய கட்சிக்கும், புதிய ஆட்சிக்கும் மக்கள் மத்தியில் பேரும் புகழும் போதுமான அளவுக்கு நீடித்தன. அவர்களது சிக்கனம், எளிமை, லஞ்ச ஊழலற்ற