பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டம் தொகுதி / பொய்சொல்லத் தெரியாமல்..1183

சமதருமம் உருவாக
அங்கங்கே தடையாக
அறி:வற்றோர் முன்வந்தால்
தங்காமல் தயங்காமல்
தகர்த்திடுவாய் தவிர்த்திடுவாய்!

என்ற வரிகள் இருந்தன. கொலைக்குத் தூண்டியவை இந்தக் கவிதை வரிகளே என்று குற்றப்பதிவு ஆயிற்று.

சுமனைக் கல்லூரியை விட்டு வெளியேற்றியபின் போலீஸ் வழக்கு மேற்கொண்டு தொடரும். அவன் தண்டனைக்கோ, அபராதத்துக்கோ உள்ளாவான்.

அவனைப் போன்ற சூதுவாதறியாத ஒர் இளங்கவிஞனைக் காப்பாற்றிவிட முயன்ற சில பேராசிரியர்கள், தேர்ந்த கிரிமினல் வக்கீல்கள் சிலரைக் கலந்தாலோசித்து, அவனைத் தப்பித்து விடுவதற்காகச் சில யோசனைகளைச் சொன்னார்கள்.

"மேக நெடுங்குழற் காட்டில்
தோன்றும்
மோக மின்னலடி உன்
மதி வதனம்' என்றும்;
“நின் கரங்களைத் தீண்டுங்கால்
கவிதையெனும் அமுதமணிப்
பொன் தருமோர் கற்பகத்தைப்
புகழ் தருமோர் நற்சுகத்தை"

- என்ற வரிகளையும், கொடுங்கோல் நிலக்கிழாரைக் கொல்லத் துாண்டிய வரிகளையும் நான் சுயமாக எழுதவில்லை. யாரோ எழுதிய அந்தக் கவிதைகளை என் தமிழ்க் கையெழுத்து முத்து முத்தாய் அழகாயிருக்கும் என்பதற்காக என்னைப் பிரதி எடுத்துத் தரச் சொன்னார்கள். மற்றபடி அவற்றுக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை என்று கல்லூரி விசாரணை, நீதிமன்ற விசாரணை எல்லாவற்றிலும் ஒரு சீராகக் கூறுமாறு யோசனை சொல்லிக் கொடுத்தார்கள். மற்றதை வக்கீல் கவனித்துக் கொள்வார். தண்டனைகளிலிருந்து நீ தப்பிவிடலாம் என்ற திட்டத்தை அவன் ஏற்கவில்லை, மறுத்தான்.

“இந்தக் கல்லூரி முழுவதும் சல்லடையில் போட்டுச் சலித்துத் தேடினாலும், காதல் கவிதைகளையும், புரட்சிக் கருத்துக்களையும் இவ்வளவு சிறப்பாகப் பாடும் கவிஞன் வேறெவனையும் நீங்கள் காண முடியாது!’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கர்வம் பொங்கும் குரலில் பதில் சொன்னான் சுகுமாரன். அவர்கள் அதைக் கேட்டு அவனைக் கண்டித்தார்கள்.

“அதெல்லாம் சரிதாம்ப்பா இப்போ அந்தக் கவித்திறமைதானே உனக்கு உலைவைத்து, உன்னை உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வைக்கப் போகுது! அதனாலேதான் சொல்றோம். தப்பிக்கிறத்துக்காகத் தற்காலிகமாக ஒரு பொய்