பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1216 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


"அன்னிக்கு சி.எம்.மோட என்.எஸ்டே அதுனாலே நீங்கதான் அவரை ரொம்ப சிரமப்படுத்தாமே எல்லாம் குறிப்பறிஞ்சு நடந்துக்கணும்:

“அதென்னங்க என்.எஸ்?" “அதாவது நோ ஸ்பீச் அல்லது நான். ஸ்பீக்கிங் -எப்படி வேணா வச்சுக்கலாம்.” 'பேசாட்டி என்னங்க? அவர் தான்ங்க எங்க இதயதெய்வம். இறுதித் தெய்வம் - உறுதித் தெய்வம் - ஒரே தெய்வம் - உலகத் தெய்வம்.” என்று முடிக்காமல் சொற்பொழிவு போலத் தொடர்ந்த அமைச்சரை இடைமறித்து, “சார்! இது பப்ளிக் மீட்டிங் இல்லே. நீங்க சீஃப் செகாட்டரி கிட்டதான் இப்ப போன்ல பேசிக்கிட்டிருங்கீங்க” என்றார் தலைமைச் செயலாளர். ‘சாரி சார்! சி.எம். பேரை எடுத்தாலே பக்தி உணர்ச்சியிலே மெய்மறந்து பகுத்தறிவுக் கிளர்ச்சி பெற்று உணர்ச்சி வசப்பட்டுப் போயிடுது. அதான் இப்பிடி’ என்று அசடுவழிந்தார் அமைச்சர், த.செ. தொடர்ந்தார். “அதோட டாக்டர் - முதல்வர் விருப்பப்படி நீங்கதான் மீட்டிங் முடிஞ்சப்புறம் பிரஸ்ஸுக்கு எல்லாம் ப்ரீஃப் பண்ணனும்கிறாரு "அந்தத் தங்கத் தலைவனின் சங்கத் தமிழ் வாயினாலா அதைக் கூறினார்? என் பாக்கியமே பாக்கியம். அவர் தம் முகமண்டலத் திருக்குறிப்பை வைத்தே நான் யாவும் புரிந்து கொள்வேன்.”

சீ.செ.த. நாயகம் இ.ஆ.ப.வுக்கு அத்தனை மந்திரிகளிடமும் முதல்வரது மெளனவிரத நாளில் கேபினட் மீட்டிங் நடக்கப்போவதைச் சொல்லி முடிக்கக் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி ஆயிற்று. அதாவது முழுசாக 12 மணி நேரம் கழிந்துவிட்டது.

காரணம் ஒவ்வொரு காபினட் அமைச்சரும் - அந்தத் தகவலுக்கு நன்றி சொல்லி தரணி காவலர் - டாக்டர் முதல்வரின் சிறப்புக்களையும் அவருக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதையும் விவரித்து முடிக்க இருபது முதல் நாற்பதுவரை நிமிஷங்களை ஃபோனிலேயே எடுத்துக் கொண்டுவிட்டனர்.

மாண்புமிகு கூடுவிட்டுக் கூடுபாய்ந்தான் பட்டி ஆடுகாத்தான் என்றொரு அமைச்சர் - ட்ரைபல் வெல்ஃபேர் மந்திரி கேபினட் மீட்டிங் என்றதுமே “எந்தக் கேபினட்’ என்றார். - “என்னங்க இப்படிக் கேட்கிறீங்க” என்று த.செயலாளர் பதிலுக்கு உறுத்திக் கேட்டதும் “அதுக்கில்லே! நம்ம கேபினட்டா? மத்திய கேபினட்டான்னு சந்தேகம் வந்திருச்சு” என்றார்.

த.செ. அதிர்ச்சியடைந்தவராக, “மத்திய கேபினட்டுக்கு நீங்க எப்படிப் போக முடியும்?” என்று வினவினார்.

"ஏன் முடியாது? மத்தியில் ஆள்வோர் நம் சங்கத் தலைவர். சங்கத் தமிழ்க் காவலர் தரணி நாயகர் - உலக வள்ளல் தயவு இன்றி அங்கு ஆண்டிட இயலாது என்பதால்