பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி

கேபினட் டெசிஷன்ஸ் * 1217

 சிறப்பு அழைப்பாக நம்மவரையும் அங்கே அழைத்திடலாமன்றோ?” என்று பதில் வந்தது. உடனே தலைமைச் செயலாளர் மயக்கம் போட்டு விழாமல் சமாளித்துக் கொண்டார். மாண்புமிகு காட்டினக் காப்புத்துறை (ட்ரைபல் வெல்ஃபேருக்கு அரசு மொழி பெயர்ப்பு) அமைச்சர் கூகூஆகாத்தான் தான் கடைசியாகத் தலைமைச் செயலாளர் போனில் பேசி முடித்த அமைச்சர், த.செ.க்கு வேர்த்து விறுவிறுத்துப் போயிற்று.

இதன் பின் ஸ்பெஷல் கூரியர் மூலம் எல்லா அமைச்சர் வீடுகளுக்கும் தகவல் அறிக்கையாக அனுப்பப்பட்டது. அன்று த.செ. தம் வீடு செல்லும்போது இரவு பதினோரு மணி.

ஒரு வழியாக வெள்ளிக்கிழமை விடிந்தது. காபினட் கூட்டத்துக்காக அமைச்சர்கள் வந்து விட்டார்கள். மணி பதினொன்றரை ஆகியும் தரணி காவலர் டாக்டர் மாண்புமிகு முதல்வர் வரவில்லை. முக்கியமான வேலையாக நித்யா ஸ்டுடியோவில் இருப்பதாகத் தகவல் வந்தது. விசாரித்ததில் குசல்ராஜ் நடித்த குடும்பத்து விபசாரி' என்ற படத்தை வீடியோவில் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது.

த.செ.மந்திரிகள் எல்லாரும் காத்திருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணியும் ஆகிவிட்டது. தரணி காவலர் - டாக்டர் - முதல்வர் வந்து சேர்ந்தார்.

தற்செயலாக அப்போது கேபினட் மீட்டிங் ஹாலில் ஒரு சுண்டெலி ஓடியது. உள்ளே நுழைந்த தரணி காவலர் கண்களில் அது பட்டதும் அவர் பாவளவனாரைப் பார்த்து அந்த எலியைச் சுட்டிக்காட்டி முகம் சுளித்தார். பாவளவனார் உடனே, அதைத் தமது தாளில் குறித்துக் கொண்டார்.

தசெஅஜெண்டாவை முதல்வரிடம் நீட்டினார்.

1. வறட்சி பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

2. உலக உப்பு விற்போர் சங்கத் தலைமை.

3.காபினட் ரிஷஃபில்

4. புதிய மாவட்டங்கள் புதிய பல்கலைக் கழகங்கள். .

இது மாதிரி இருந்தன.அவை, வாரியங்களை ஏற்படுத்தலாம். என்று மொட்டையாக ஒரு துண்டுத் தாளில் எழுதிப் படுஞாயிறிடம் நீட்டினார் தரணிகாவலர்.

முதல் அஜெண்டாவுக்கு இதுதான் பதில் போலும் என்று நினைத்துக் கொண்டார்கள். - அடுத்து மாண்புமிகு முதல்வர் பெரியவர் க.பொ.சி.யைப் பயன்படுத்தவும் என்று மற்றொருத்துண்டுத்தாளில் எடுத்து எழுதி நீட்டினார். மூன்றாவதாக எதுவும் எழுதாமல் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டினார் தரணிகாவலர் நாலாவதாக நா.பா. Il – 38