பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கேபினட் டெசிஷன்ஸ்

1219

ரூபாய் செலவில் தரணி காவலர் அரசு தொடங்கும் என அறிவிக்கிறேன்.” எலிக்கும், பூனைக்கும் நாலாயிரம் கோடியா? எனப் பிரமித்து வாயைப் பிளந்தார் ஒரு நிருபர்.

இன்னொரு நிருபர் கிண்டலாக, “செகரெட்டேரியட்டில் காபினட் மீ ட்டிங் நடக்கிற அறையில் ஓடிய எலியைப் பார்த்து முதல்வருக்கு இந்த ஐடியா உதித்த காரணத்தால், இதில் பெரும் பகுதி செகரெட்டேரியட்டில் உள்ள திருட்டு எலிகளை ஒழிக்கவே பயன்படுத்தப்பெறும் என்று பொருள் கொள்ளலாமா?” என்று கேட்டார்.

"செகரெட்டேரியட்டில் எலிகளை விடப் பெருச்சாளிகளே அதிகம் இருப்பதால், முதல்வர், தனியாக இன்னொரு சிறப்பு வாரியமாகப் ‘பெருச்சாளி ஒழிப்பு வாரியம்’ ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாமா?” எனக் குறுக்கே புகுந்தார் மற்றொரு எதிர்க்கட்சிப் பத்திரிகைக்காரர்.

படுஞாயிறு பத்திரிகையாளர்களை அதிகம் விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே மேலும் கொதிப்படையாமல் - நிதானமாக மறுமொழி கூறினார். “அவசியம் ஏற்பட்டால், மாண்புமிகு டாக்டர், முதல்வர், தரணி காவலரின் அரசு அப்படிச் சில சிறப்பு வாரியங்களை ஏற்படுத்தவும் தயங்காது, மயங்காது, உறங்காது, துவளாது, தொய்யாது என்பதைத் தாழ்மையாக வேண்டி விரும்பித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“எலிகளை ஒழிப்பதற்காகப் பூனைகளை வளர்க்கப் போய் பூனைகளின் தொல்லை அதிகமாகி விட்டால், அரசு அந்த நிலைமையை எதிர் கொள்ள எவ்வாறு செயல்படும் என்பதை அறியலாமா?”

“அப்படி ஒரு நிலைமை ஏற்படுமானால், மாண்புமிகு, டாக்டர் தரணி காவலரின் அரசு உடனே பூனைகளை ஒழிக்க ஒரு நாய் வளர்ப்பு வாரியம் தொடங்கத் தயங்காது.”

“தரணி காவலரின் அரசு எலிகள், பூனைகள் தவிர மக்களை வளர்க்க ஏதாவது செய்யுமா?”

“நாங்கள் வளர்வதிலிருந்தே மக்கள் வளர்வது தெரியவில்லையா?”

“எலி ஒழிப்பு வாரியத்தின் தலைவர் பதவியையாவது, கலம்பகச் செல்வர் க.பொ.சிக்குக் கொடுப்பார்களா என்பதை அறியலாமா?”

“பூனை வளர்ப்பு வாரியத்தின் தலைவர் யார்?”

“இரண்டு வாரியங்களுக்குமான தலைவர் பதவிகளை உரிய வேளையில் ஊரறிய, உலகறிய, நாடறிய - நல்லவர்கள் அறியத் தரணி காவலர் அவர்கள் அறிவிப்பார் என்பதைப் பணிவோடு, கனிவோடு, செறிவோடு இறுதியாக அறுதியாக, உறுதியாக, மறதியாக அறிவோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.”

“நீண்ட காலமாகப் பதவியின்றித் தவிக்கும் கலம்பகச் செல்வர்…”

“மாண்புமிகுடாக்டர் முதல்வர், தரணி காவலர் அவர்கள் விருப்பப்படி க.பொ.சி. அவர்களின் நன்றி விசுவாசங்களைப் பாராட்டும் முகமாக, அவரை நன்றியின் அடையாளமாகத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கருதுகின்ற உப்பு- அதாவது உலக