பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கேபினட் டெசிஷன்ஸ்

1221

ஓங்கி உயர்ந்தது. அதே சமயம் பேசிய சொற்களில் ஒரு வகைச் செயற்கைப் பணிவும் காட்டப்பட்டது.

“இந்தப் பதவி அந்தத் தலைவன் தயவிலே கிடைத்த பிச்சை. கொடுத்ததெல்லாம் கொடுத்தவனுக்கு எடுக்க விரும்பியதை, என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளத் தாராளமாக உரிமை உண்டு. தரணி காவலர் பரணி பாடும் அணியிலே ஒரு கடைக்கோடித் தொண்டனாக வாழ்ந்து என் மீதி நாட்களைச் செலவிடுவேன் என்று குன்றாத, குலையாத உலையாத - அசையாத - அரளாத ஆடாத, ஓடாத - விசுவாசத்துடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்ள உரிமை பெறுகிறேன் என்பதை…”

மந்திரியை அடுத்த வாக்கியத்துக்கு நகர்த்த விரும்பிய ஆங்கிலப் பத்திரிகைநிருபர் ஒருவர் புல்டோஸர் போல் குறுக்கே பாய்ந்து ‘கபால்’ என்று அவர் சொற்களை அமுக்கினார். “புதிய பல்கலைக் கழகங்கள் - புதிய மாவட்டங்கள், ஏதேனும் அறிவிக்கப்படுமா?”

இக்கேள்வி அமைச்சரை நிதானமான நிலைக்குக் கொண்டு வந்தது, ‘மந்திரி சபை மாற்றம்-ஊழல் மந்திரிகள் ஐவர் நீக்கம்’ - என்பதை எல்லாம் விட்டு ‘சப்ஜெக்ட்’ வேறு திசைக்குத் திரும்பியதே, அந்த வேளையில் அமைச்சருக்கு ஆறுதலாக இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தார். பி.எ. ஒரு டம்ளரில் சுடச்சுட அமைச்சருக்கும் - நிருபர்களுக்கும் காபி வழங்கினார். எல்லாருமே காபி குடித்து முடிக்கப் பதினைந்து நிமிஷங்கள் ஆயின. மறுபடி மாண்புமிகு அமைச்சர் மூடில் வந்து ‘செட்டில்’ ஆனார். “புதிய மாவட்டம் நிச்சயமாக உண்டு. 161 புதிய மாவட்டங்களை ஏற்படுத்திப் பல மறந்துபோன பெயர்களைச் சூட்டி மகிழ்விக்கும் மாபெரும் புரட்சியைத் தரணி காவலர் டாக்டர் முதல்வர் மாண்புமிகு தங்கத் தலைவர் அரசு சாதிக்க இருக்கிறது.”

“ஐயையோ! 161 மாவட்டமா? திடீர்னு கலெக்டர்ப் பஞ்சம் வந்துடுமே? நூற்றுக்குமேலே கலெக்டர்கள் கிடைப்பாங்களா?”

“மாறாக - வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நடுவண் அரசின் புதிய எழுபதம்சத் திட்டத்தில், அறுபதாவது திட்டத்தை எங்கள் தரணி காவலர் அரசு இப்படிப் புதுப் புது மாவட்டங்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் நிறைவேற்றுவது நிருபருக்குப் புரிய வேண்டும். எம் அரசு பல கலெக்டர்களுக்கு வேலை தரும் என்பதே உண்மை. மேலும் மறைந்த மேதைகள், இறந்த தலைவர்கள் - மறந்த பெரியோர்கள் - சிறந்த சான்றோர்கள் பெயர்களைச் சூட்ட வாய்ப்பளிக்க வேண்டாமா? அத்தகு நல்லெண்ணத்தை உட்கொண்டே எம் தங்கத் தலைவன் - இத்தகு திட்டத்தை இதயத்தில் கொண்டுள்ளதை அறிய வேண்டும்.”

“ஒவ்வொரு பட்டி, தொட்டியும் ஒரு மாவட்டம் ஆயிடுங்களே...?”

“இதற்கு முந்திய இருட்டடிப்பு ஆட்சியிலே கஞ்சத்தனமாக ஏழே ஏழு மாவட்டங்கள்தான் இருந்தன. எம் தலைவர், தங்கத் தலைவர் தரணி காவலர் - புரளியை வென்ற புரட்சி மன்னன் ஆட்சிக் கட்டிலில் (கட்டில் என்பது இங்கு