பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கேபினட் டெசிஷன்ஸ்

1225

கடமையுடனும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்தாங்க என் இதய தெய்வம், தன்மானத் தந்தையின் நாத்திக இயக்கத்திலே வளர்ந்து, உரமேறி இதயதெய்வத்தின் அருளிலே வழிபட்டுக் கிளர்த்து. அந்தத் தங்கத் தலைவனின் பொன்னார் திருவடிகளே சரணமென்று புகலடைந்து விழுந்து கிடக்கும் இந்த ஏழைத் திருத் தொண்டனின் எளிய சொற்கள் என்னவென்றால் அவர் புகல்வதே மெய். அவரே எங்கள் இதய தெய்வம் இறுதித் தெய்வம் - உறுதித் தெய்வம் - ஒரே தெய்வம் - உலகத் தெய்வம் - ஒப்பற்ற தெய்வம்…”

- உரையாடலை அமைச்சர் இன்னும் முடிக்கவில்லை. ஃபோனில் அவரைக் கூப்பிட்டிருந்த நிருபர் அலுப்படைந்து போய் ‘கட்’ செய்து விட்டார். இந்த விநாடி வரை மாண்புமிகு முதல்வர் டாக்டர் தரணி காவலர் அடுத்துக் கூறிய படுஞாயிறு பற்றிய உண்மையில் சந்தேகமிருந்தாலும், இப்போது அந்தச் சந்தேகம் இந்த விநாடி தீர்ந்து விட்டாற் போலிருந்தது. படுஞாயிற்றின் மூளை பற்றி நிருபருக்கே சந்தேகமாகி விட்டிருந்தது.

மாண்புமிகு டாக்டர் முதல்வர் தரணி காவலர் கூறியபடி படுஞாயிறு திச்சயமாக ‘மெண்டல்’ ஆகி விட்டதாகவே நிருபருக்குத் தோன்றியது இப்போது.

மறுநாள் கவர்னரும், சீஃப்செகரெட்டரியும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“என்னங்க ஒரே குழப்பமா இருக்கு? யார் மெண்டல்? யார் தெளிவா இருக்காங்கன்னே புரியலியே!”

“உஷ்! ஒண்ணும் மூச்சு விடாதீங்க! நமக்கு எதுக்கு வீண் வம்பு? ஏதாவது பேசினோம்னா நம்மையும் ‘மெண்டல்’னு சொல்லிடப்போறாங்க?”

இந்தப் பயம் வந்தவுடன் பேசாமல் இருவருமே அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டு, அவரவர்களுடைய வீடியோவில் சினிமாப் பார்த்துப் பொழுது போக்கச் சென்றார்கள்.

(தீபம், தீபாவளி மலர், 1987)