பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172. ஸ்ரீராமனைக் காட்டிலும்

வ்வளவுதான் படித்திருந்தாலும், என்னதான் நாகரிகம் அடைந்திருந்தாலும், மனிதர்கள் இதில் மோசமாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. அவதார புருஷனாகிய இராமனே விதி விலக்காக நடந்து கொள்ளவில்லை என்றால் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?

‘அவன்’ முதல் தடவை டெலி ஃபோன் பண்ணி ஐந்நூறு ரூபாய் ரொக்கத்தோடு, லால்பாக் தோட்டத்தில் சந்திக்கும்படி சொன்னான். நீண்ட தயக்கத்துக்குப் பின் கெளரி யாருக்கும் தெரியாமல் ஒர் ஆட்டோ வைத்துக் கொண்டு போய்ப் பணத்தை அழுது விட்டு வந்தாள்.

உண்மையில் அந்த முறை அவன் தனக்கு வறுமை, பண முடை, சோற்றுக்கே இல்லை என்றுதான் பண உதவி கேட்டதாகச் சொன்னான். வேறு பயமுறுத்தல் எதுவும் இல்லை.

“பள்ளிப் பருவத்துப் பால்ய சிநேகிதத்துக்காகவும் கூடப் படித்தவன், சொந்த ஊர்க்காரன் சிரமப்படுகிறானே என்ற இரக்கத்துக்காகவும், இந்தத் தடவை எப்படியோ உதவி பண்ணிட்டேன்! இனிமேல் நீ என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது சங்கர்” - என்று கெளரி அவனிடம் மன்றாடிய போது, “பிராமிஸ்ஸா சொல்றேன்! எனக்கு வேலை கிடைச்சு முதல் மாதச் சம்பளம் வாங்கினதும், இந்த ஐந்நூறை உனக்கு நான் வட்டியோடு திருப்பிக் குடுத்துடறேன்” என்றான் சங்கர்.

ஒரு நாள் கணவன் ஆபீஸ் புறப்பட்டுப் போனதும் ,மல்லேசுவரத்துக்கு வீடு தேடி வந்து காலிங் பெல்லை அழுத்தினான் சங்கர். அவளுக்குத் திக்கென்றது.

“என்னைத் தப்பா நெனைச்சுக்காதே கெளரீ! நான் ஒரு ஆபத்துலே சிக்கிண்டிருக்கேன் தப்பணும்னா உடனே ‘ஒரு தவுஸண்ட் ருபீஸ்’ வேணும். நீதான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணணும்! இந்த ஊர்லே எனக்கு வேற யாரையும் தெரியாது.”

அவன் துணிந்து வீடு தேடி வந்ததைக் கண்டவுடனே, கெளரியின் ஆத்திரமும், பதற்றமும் அதிகமாயின. நிஜமாகவே கஷ்டம் பொறுக்க முடியாமல் வருகிறானா, அல்லது மெல்ல மெல்லத் தன்னை ‘பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்கும் முயற்சியா? சாமர்த்தியமாக அவனைப் பங்களாவுக்குள் விடாமலே முகப்பில் தோட்டத்தை ஒட்டி இருந்த வராந்தாவிலேயே ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார வைத்துவிட்டு, “இரு! காபி கொண்டு வருகிறேன்” என்று உள்ளே சென்றவளைப் பின்னாலேயே ஓடிவந்து வழி மறித்து,”இந்த ட்ரிக் எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதேடி.