பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஶ்ரீ ராமனைக் காட்டிலும் * 1243

சொல்கிறவனாகவோ இல்லை.இது பொதுவான கணிப்புத்தான்.ஆனால் இராமனின் சந்தேகம் என்பது ஒவ்வோர் ஆண்பிள்ளையுடனும் கூடப் பிறந்தது. கிருஷ்ணனின் பலரைக் கவரும் குணம் ஒவ்வோர் ஆணுக்கும் உண்டோ இல்லையோ, இராமனின் சந்தேகம் ஒவ்வோர் ஆணுக்கும் நிச்சயமாக உண்டு. தெய்வீக அவதாரம் என்று கொண்டாடப்படும் இராமனையே கேவலம் ஒரு சிறிய சந்தேகம் வெறும் மிருக குணமுள்ள சாதாரண மனிதனாக்கி விட்டதென்றால் மற்றவர் எம்மாத்திரம்!

அவர்களுடைய உயர்நிலைப் பள்ளி நாளில் எழுதியது எடுத்தது என்றாலும் -அந்தப் பழைய கடிதங்கள், புகைப்படங்களுடன் சங்கர் தன் கணவன் குமாரைச் சந்தித்து இல்லாததும், பொல்லாததுமாக அளந்தான் என்றால் குமாரின் மனநிலை எப்படி மாறக்கூடும்? கற்பனை செய்த போதே கெளரியின் உடல் நடுங்கியது.

இரண்டாவது தடவையும் அவள் அவனுக்கு - அவனது மிரட்டலுக்கு அடிபணிந்தாள். மூச்சுவிடாமல் லாக்கரைத் திறந்து புத்தம் புதிய நோட்டுக்களாக எண்ணிப்பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை சங்கரிடம் கொண்டு வந்து கொடுத்தாள். “எல்லா நோட்டையுமே இப்பிடி முழுசு முழுசாக் குடுத்தா எப்படி? இங்கேருந்து நான் போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் போகப் பத்து ரூபாயாவது ஆகுமே? அதுக்குச் சேஞ்ஜ் வேணாம்?”

மறு பேச்சுப் பேசாமல் மேலும் ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து வந்து இயந்திரமாக இயங்கி, அவனிடம் நீட்டினாள் கெளரி. எப்படியாவது அவன் அங்கிருந்து தொலைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.

இன்னொருவனுடன் கடிதத் தொடர்பு இருந்தது, இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதன் காரணமாக மனைவியைக் கணவன் குரூரமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் ஒவ்வொன்றாக அவளுக்கு நினைவு வந்தன.

அவள் முகத்தில் மலர்ச்சி பறிபோனது. இரவில் உறக்கம் பறிபோனது. சதா எதையோ பறி கொடுத்தது போல் அவள் இருந்ததைக் கண்டு குமாரே அன்றிரவு சாப்பிடும்போது அவளை விசாரித்தான்.

“கெளரி! உனக்கு என்ன வந்தது? ஏன் என்னமோ மாதிரி இருக்கே? உடம்பை ஏதாவது பண்றதா? இல்லே, நான் ஏதாவது என்னையறியாமலே உன்னைக் கடிந்து சொல்லிட்டேனா? உன் வாட்டத்துக்கு என்னதான் காரணம்”

"அதெல்லாம் ஒண்னுமில்லே! நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.” அவள் மழுப்பினாள். அவன் நம்பவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே பம்பாயிலிருந்து வருகிற கம்பெனி எம்டியை வரவேற்க விமான நிலையம் போயாக வேண்டும் என்று குமார் விடிந்ததுமே புறப்பட்டுப் போய்விட்டான். .

அன்று பதினொரு மணிக்கு மேல் கெளரிக்கு மறுபடி சங்கர் ஃபோன் செய்தான். இந்தத் தடவை அவனுடைய கோரிக்கையில் தொகை ஏறியிருந்தது. ஐயாயிரம் ரூபாய்