பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ஶ்ரீ ராமனைக் காட்டிலும் * 1245

“நான்தான் சங்கர்! நாளன்னிக்கிக் காலையிலே பதினொரு மணியிலேருந்து பன்னிரண்டுமணிக்குள்-நேரத்திலே மாறுதல் இல்லே.ஆனால் இடத்தை மாத்தறேன். லால்பாக் - கார்டன்ல நாளன்னிக்கி கிளாஸ் ஹவுஸ்லே என்னமோ லிங்காயத் கான்பரன்ஸ்னு பேப்பர்ல பார்த்தேன். அதனாலே ஏகப்பட்ட போலீஸ் நிற்கும். அந்த இடம் சரிப்படாது. அதனால் நீ விதான் செளதா எதிர்த்தாப்ல கப்பன் பூங்கான்னு இருக்கே, அங்கே அதுக்குள்ளே ஒரு சில்ரன்ஸ் பார்க் இருக்கு அதுனோடமுகப்புக்கு வந்துடு! உனக்கு இன்னொரு ஆப்ஷன் கூட ஆஃபர் பண்றேன். நாளன்னிக்கே மொத்தமா இருபத்தையாயிரம் கொண்டு வந்து தர்றதா இருந்தா எங்கிட்ட இருக்கிற உன்னோட லெட்டர்ஸ், போட்டோ எல்லாத்தையுமே திருப்பிக் குடுத்துடலாம். முடிஞ்சா இருபத்தையாயிரத்தோடு வா."

அவள் பதிலை எதிர்பார்க்காமலே எதிர்ப் பக்கம் ஃபோன் துண்டிக்கப்பட்டுவிட்டது. இருபத்தையாயிரத்தைக் கொண்டு போய் அழுது எல்லாவற்றையும் திருப்பி வாங்கிக் கொண்டுவந்து விட்டால் இந்த பிளாக் மெயிலில்’ இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்குமே என்றுகூடத் தோன்றியது.

'இவனைப் போல ஒர் அயோக்கியனை எப்படி நம்புவது? எல்லாவற்றுக்கும் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக் கொண்டு நம்மை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவான் என்று பயமாகவும் தயக்கமாகவும் கூட இருந்தது. நல்ல வேளை! குமார் அயர்ந்து உறங்கிய பின்பு இந்த ஃபோன் வந்து தொலைத்தது. இல்லாவிட்டால், அவரே எடுத்துப் பேசும்படி ஆகியிருக்கும். என் குட்டும் உடைபட்டு நாறியிருக்கும்.

மறுநாள் பூராவும் ஐயாயிரரூபாய் பணம் தயார் செய்து கொள்ளுவதில் கழிந்து விட்டது. காலையில் காபி யருந்தும் போது குமார் மறுபடி அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டான்.

“வர வர நீ புதிராக மாறிண்டிருக்கே கெளரி ராத்திரியெல்லாம் நீ தூங்காமப் புரண்டு புரண்டு படுத்தது எனக்குத் தெரியும். ராத்திரி தூக்கம் இல்லாததாலே தான் உன் முகம் இப்பப் பேயறைஞ்சமாதிரி இருக்கு”- . அவன் அவளைக் கூர்ந்து நோக்கிப் புன்னகை புரிந்தான். பின்பு மெல்லச் சொன்னான்; ‘என்னை நீ ஏமாத்த முடியாது கெளரீ! உன் முகத்திலே பழைய சிரிப்பையும், மலர்ச்சியையும் காணலியே? சில சமயம் புரியாத்தனத்தினாலயும் நமக்குள் நாமே ஒருநரகத்தைப் படைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம். மனசு திறந்து பேசினால் முக்கால்வாசி வேதனை போயிடும்”

___

“சரி! உங்கிட்ட பேசிப் பிரயோஜனமில்லே. ராத்திரித் தான் தூக்கமில்லே. பகல்லியாவது தூங்கு."- என்று கூறிவிட்டு அலுவலகம் புறப்பட்டான் குமார்'

இப்படி இன்று கணவன் தூண்டித் தூண்டிக் கேட்டதிலிருந்து நள்ளிரவில் ஃபோன் கால் வந்ததுதான் வெளியே ஹாலில் உள்ள மற்றொரு ஃபோன் மூலம் பேசியது எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று முதலிலே