பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஸ்ரீராமனைக் காட்டிலும்

1247

நிமிர்ந்தால், சற்று முன் மரத்தடியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு (போலீஸ்காரர்கள் - மப்டியில் இருந்தவர்கள் என அறிய முடிந்தது) முரடர்களும் அவள் கணவன் குமாரும் நின்றனர். சூழ்ந்து கொண்டது போல வளைத்து நின்றனர். உடனே சங்கர் ஓட முயன்றான். முடியவில்லை. பிடிபட்டான். அவனிடமிருந்து கிடைத்த உறை இன்னும் கௌரியிடம்தான் இருந்தது. இன்னும் அவனிடம் திருப்பிக் கொடுக்கப் படவில்லை.

‘'நீ ஒண்ணும் பயப்படாதே! எனக்கு எல்லாம் தெரியும் கெளரீ! அன்னிக்கி ராத்திரி இவனோட நீ ஃபோன்ல பேசினதை நானும் பெட்ரூம் டெலிபோன் மூலம் எடுத்துக் கேட்டேன்” - என்றான் குமார்.

சற்றுத் தள்ளி நிறுத்தப் பட்டிருந்த போலீஸ் ஜீப் அருகே வந்தது. சங்கரைப் பிடரியில் பிடித்துத் தள்ளி ஜீப்பில் ஏற்றி விட்டு,”சார் அவங்க வாக்கு மூலம் தேவை! அப்புறம் அவங்களோட நீங்களும் ஸ்டேஷனுக்கு வந்து எழுதிக் குடுத்துட்டுப் போயிடுங்க” என்று குமாரிடம் சொல்லி விட்டு ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு போனார்கள் அவர்கள்.

“என்னை மன்னிச்சுடுங்கோ! நான் முதல்லேருந்தே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லாமலிருந்தது என் தப்புத்தான். மனசறிய நான் ஒரு பாவமும் பண்ணலே.”

இப்போது அவள் குரலில் குற்ற உணர்வு தொனித்தது. கணவன் தன் மேல் என்னென்ன சந்தேகப் படப் போகிறானோ, எதிர் கால வாழ்வு எப்படி எப்படி நரகமாகப் போகிறதோ என்று மனம் உள்ளூறப் பதை பதைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

“அசடே! நீ பண்ணினது ஒண்ணும் தப்பில்லே. உன்னை மாதிரி நெலைமையிலே நான் இருந்தாக் கூட இப்படி இதைத் தான் செய்திருப்பேன். அவன்தான் பெரிய ரோக். அவனை மாதிரிப் புல்லுருவிகள் தான் சமுதாயத்திலிருந்தே களையப்பட வேண்டும். என்னுடைய காலேஜ் டேஸ்ல கூட என்னோடு படித்த ஒரு பெண் எனக்கு அசட்டுப் பிசட்டென்று லெட்டர் போட்டிருக்கா. இன்னிக்கு அவ ஒரு மினிஸ்டரோடமனைவி. நான் அவளைப் போயி மிரட்டலாமா? கூடாது. உறவுகள் புனிதமானவை என்றால், அவற்றை விலை பேசக் கூடாது. சர்வ சாதாரணமானவை என்றால், அவற்றை மறந்து விட வேண்டும். இரண்டையும் செய்யாமல் இந்தப் பயல் பிளாக் மெயிலில்’ இறங்கியதுதான் சமூகக் கொடுமை.இவனைப் போன்றவர்களே இதில் குற்றவாளிகள்.”

“என்னிடம் உங்களுக்குத் தெரியக் கூடாதது எதுவுமில்லை. இந்தாருங்கள்! நீங்களே இதெல்லாம் படிச்சுடறது நல்லது” என்று அந்த உறையைக் குமாரிடம் நீட்டினாள் கெளரி.

குமார் புன்முறுவல் பூத்தபடி அவளைப் பார்த்தான். தயங்கியபடி அதை வாங்கினான். பிரித்தான்.

அங்கே பக்கத்தில் கப்பன் பூங்காவின் இலையுதிர் காலத்துச் சருகுகளைக் குவித்து எரித்துக் கொண்டிருந்த தோட்டக்காரனின் தீ மூட்டத்தருகே சென்று