பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 113

சின்னியும் முத்துராமலிங்கமும் அதைக் கேட்டுச் சிரித். தார்கள். திரும்பும்போது மாலை நேரமாகியிருந்தது.

வடபழநிக்குப் போயி முருகனைக் கண்டு ரெண்டு. நல்ல வார்த்தை சொல்லிக் கும்பிட்டுப் போட்டுப் போக லாமா தம்பீ!' * : *

போகலாம் சின்னி எனக்கும் அந்தக் கோயிலுக்குப் போகணும்னு ஆசை."

16

இருவரும் அங்கிருந்து பஸ் ஏறி வடபழநி முனையில் வந்து இறங்கினார்கள். - -

கோயிலுக்குத் திரும்புகிற தெருமுனையில் ஒரு பொதுக் கூட்டம் நடப்பதற்கான பெரிய மேடை தயாராகிக் கொண் டிருந்தது. குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மக்கள் முன்னேற்றப் பேரணி-என்ற பேனர் பளிச்சிட்டது.

அங்கங்கே கிழிசல் தெரிந்த கதர்ச் சட்டையும், அரை யில் பழுப்பேறிய கதர் வேஷ்டியும்ாகப் பயில்வான்போல் தோற்றமுள்ளவரான ஒரு ஸ்டாலின் மீசைக்காரர் மைக் முன்நின்று மக்களை அறைகூவி அழைத்துக் கொண்டிருந் தார். - . . .

அன்பர்களே! பெருமக்களே நடைபெறுகிற ஆட்சி, யின் லஞ்ச ஊழல்களை விவரித்துத் தேசத் தொண்டர், சிவகாமிநாதன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே முழங்கப் போகிறார்.' -

"சிவகாமிநாதன்கிறது வேற யாருமில்லே, பேசறாரே. அவரேதான்' என்றான் சின்னி, “. . . ; *... '" - -

"அப்பிடியா...? -என்று ஆச்சரியத்தோடு மேடைப்

பக்கம் பார்த்தான் முத்துராமலிங்கம். -

பேசிக்கொண்டிருந்த சிவகாமிநாதனே மைக்கை இடது கையால் பொத்திக்கொண்டு பக்கவாட்டிலிருந்த டிக் கடையைப் பார்த்து.