பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நிசப்த சங்கீதம்

'இல்லே! தேச விடுதலைப் போராட்டத்துலே குடும் பத்தையும் வாழ்க்கையையும் சொத்துச் சுகங்களையும் தியாகம், பண்ணின சிவகாமிநாதன் மாதிரி ஆளுங்க இன்னும் சிரமப் பட்டுக்கிட்டே இருக்காங்க...சிரமப்படாம எப்போ ள்ந்தக் கட்சி ஜெயிக்குதோ அதுக்கு ஜால்ரா போட்டுடறவன் வசதியா இருக்கான்.' . . . .

'இதெல்லாம் நெனைச்சுப் பார்த்தாக் குழப்பம் தான் மிஞ்சும் தம்பி! நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்: புதன் கிழமையிலிருந்து நீ முதலியார் சினிமால் கம்பெனியிலே பாபுராஜுக்கு உதவியாய்ப் போய்ச்சேரு. மத்ததை அப். புறம் பார்த்துக் கிடலாம்-' -: .

தன்னைப் போல் சின்னி அவற்றை யெல்லாம் பற்றி அதிகம் சிந்தனை செய்து மனத்தை அலட்டிக் கொள்ளத் தயாராயில்லை என்பது புரிந்தது.

கடற்கரை மணற் பரப்பில் பேசிக் கொண்டிருந்தபடுத்துக் கொண்டிருந்த ஆட்களைப் போலிஸ்காரர்கள் வந்து கிளப்பி விரட்டுகிறவரை அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் போய்க் கிருஷ்ணாம் பேட்டை மயானத்தின் பாழ்மண்டபத்திலே தான் இரவைக் கழிக்க நேர்ந்தது. சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான். "அங்கே கொலைகாரன் பேட்டைக்குப் போயிருந்தா கொஞ்சம் வசதியாப் படுக்கலாம்.' - - - - "பரவாயில்லே வசதிக்கென்ன வந்திச்சு இப்போ'

அதுக்கு இல்லே. நான் எங்கே வேணாப் படுப்பேன். எனக்கு எல்லாம் பழக்கம் தான்...நீ படிச்ச ஆளு. நாளைக்கு ஒரு வேலைக்குப் போகப் போறவன் இப்பிடி எல்லாம்?...' .

'நான் படிச்சவன் தான். ஆனா சொகுசுக்கு அடிமைப் பட்டுப்போனவன் இல்லே. எத்தினியோ ராத்திரி தலை யிலே உருமால் கட்டிக் கிட்டுப் பருத்திக்காட்டுக்குக் கையிலே அருவாளோட காவல் காக்கப் போயிருக்கேன்..."