பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 125

முத்துராமலிங்கம் இப்படிக் கூறியதற்குச் சின்னி பதி லெதுவும் சொல்லவில்லை.

18

எப்போது பொழுது விடிந்ததென்றே தெரிய

முத்துராமலிங்கம் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந் திருந்தபோது சின்னி ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை இழுத்தபடி காலைத் தினசரிப் பத்திரிகையோடு வந்து கொண்டிருந்தான். - -

தின் சரியை வாங்கிப் பார்த்தபோது முதல் நாள் இரவு வடபழநிப் பொதுக் கூட்டம் பற்றியும் தடியடி பற்றியும் சிவகாமிநாதனும் அவருடைய மகளும் மகனும் கைதான விவரம் பற்றியும் அவர்கள் ஜாமீனில் விடுதலையானது பற்றியும் செய்திகள் வெளிவந்திருந்தன. மற்றொரு பக்கத்தில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் தம்மைக் கைது செய்ததைக் கண்டித்துக் கமிஷனர் ஆபீஸ் முன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சிவகாமிநாதன் அறிக்கை விட்டிருந்தார். - - அவர் என்று உண்ணாவிரதம் என்பதாக அறிவித் திருந்தாரோ, அன்று காலையில் தான் புதன் கிழம்ை. பாபுராஜ் முத்துராமலிங்கத்தை முதல் முதல்ாக வேலையில்.

சேரச் சொல்லியிருந்த நாள், . -

ஆனாலும் ஸ்டூடியோவுக்குப் புறப்படுமுன் திருவல்லிக் கேணிப் பார்த்தசாரதி சுவாமி கோயிலில் போய்ச் சாமி கும்பிட்டுவிட்டு நேரே பைகிராப்ட்ஸ் ரோடும் திருவல் விக் கேணி ஹைரோடும் சந்திக்கிற ஜாம் பஜார் முனையில் இருந்த பூக்கடையில் மாலை, வாங்கிக்கொண்டு சிவகாமி. நாதன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு ஆர்வத்தோடு புறப்பட்டுப்போனான் முத்துராமலிங்கம். -