பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . . 131

வந்திருந்தது மட்டுமில்லை. உன்னையும் உங்கம்மா வையும்கூடத் தூரத்திலிருந்து பார்த்தேன். தியாகி சிவகாமி நாதன் மகள் உண்டியல் குலுக்கிட்டு வந்தப்ப மந்திரி சிதம்பரநாதன் மகளான நீ அதிலே அஞ்சு ரூபா போட்ட தையும் பார்த்தேன். உங்க காருக்குப் போக வழியில் லேன்னுதானே அன்னிக்குக் கூட்டத்தையே கலைச்சீங்க?"

ஐயையோ நான் கூடவே கூடாதுன்னேன்! டிரைவர் தான் என் பேச்சைக் கேட்காமே அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அன்னிக்கி அத்தனை

கலாட்டாவும் பண்ணி வச்சான்.

இந்தத் தேசத்து அரசியல்லே உங்கப்பா மாதிரி ஆளுங்க கை ஓங்கியிருக்கிறவரை என் போன்ற இளைஞர் களும், சிவகாமிநாதன் போன்ற முதியவர்களும் இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தியே ஆகனும் போலிருக்கு." . - -

"இளையத் தலைமுறையைச் சேர்ந்தவள்ங்கற முறை யிலே எங்கப்பாவோட அரசியல் எனக்கும் கூடத்தான் பிடிக்கலே.'

"பிடிக்கிறதோ பிடிக்கவியோ, நீ அவரோட மகள். அவரை எதிர்க்க முடியாது.' - . . . .

"எக்ஸாக்ட்லி...அப்பிடித்தான் நான் இருக்கேன். மறுபடி எப்பப் பார்க்கிறது?" என்று கேட்டுக்கொண்டே பெண்கள் உடை மாற்றும் அறையை நோக்கி விரைந்தாள் மங்கா. அவன் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினான். - அவள் அந்த உடையில் மிகமிக அழகாக இருந்தாள். அதைப் பற்றி அவன் அவளிடமே ஒரு வார்த்தை புகழ்ந்து சொல்லியிருந்தால் ஒரு வேளை அது அவளுக்கு மகிழ்ச்சியா யிருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அவளுடைய அப்பா வின் லஞ்ச ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் பற்றியே நேரில் பேசிவிட்டு அவள் சென்ற பிறகு அவளு டைய அழகைப் பற்றி நினைக்கும் தன் செயலைத் தானே