பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互5(} நிசப்த சங்கீதம்

தாலேதான் பல அரசியல்வாதிங்க வெற்றி தங்களைத் தேடி வர்ரதுக்குள்ளே பொறுமை இழந்து வெற்றி எங்கே இருக்கோ அங்கே அதைத் தேடிக் கட்சி மாறிப் போயிட றாங்க...உங்க அப்பா மாதிரி...' -

"பொறுமையையும் இலட்சியப் பிடிப்பையும் நீங்க தான் எனக்குக் கத்துக் குடுக்கணும்...?' --

நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும். உயர்தரமான நல்ல தலைவர்கள் இல்லாத தேசத்தில், இல்லாத சமயங் களில் இப்ப்டித்தான் இருக்கும். நான் இளைஞனாயிருந் போது அன்று என்போன்ற இலட்சக்கணக்கான இளைஞர் களை நம்பச்செய்து பின்பற்ற வைப்பதற்குத் திலகர், காந்தி, பாரதியார், வ.உ.சி., சிவா, நேரு என்று பலபேர் இருந்தார்கள் அம்மா......' - -

இப்போது எங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா...' . . . . . . . .

நான் வெறும் தொண்டன். இன்றைய அரசியலுக்குத் தேவையான பணவசதி. டமாரம் அடித்தல், இரண்டும் இல்லாதவன். மனோ தைரியத்தை மட்டுமே செல்வமாக வைத்திருப்பவன்.' - - - *.

அவருடைய பணிவும், எளிமையும் நிறைந்த பேச்சுக்கள் அவளை ஈடுபாடு கொள்ளச்செய்தன. ஒரு பிரமுகருக்குச் சுற்றிக் காண்பிப்பதுபோல் அவளுக்கு அவர் தமது சிறிய அச்சுக்கூடத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவரது வீட்டுடன் இணைந்திருந்த அந்த அச்சுக்கூடத்தில் அவருடன் அவருடைய மகள் மகன் எல்லாருமே அச்சக யூனிஃபாரம் அணிந்து வேலை செய்துகொண்டிருந்தனர். . . . .

மாலை வேளைகளில் நகரின் பொது மேடைகளில் 'பல்லாயிரம் மக்களைக் கவரும் அந்தச் சிங்கக்குரலுக்குரிய தலைவர், தம்முடைய குடிசைத்தொழில் போன்ற அச்சுக் கூடத்தில் ஓர் எளிய தொழிலாளியாகக் காட்சியளிப்பது அவள் மனத்தைத் தொட்டது. * . . .