பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60 நிசப்த சங்கீதம்

யாகிய மந்திரி எஸ். கே. சி. நாதனின் மேல் அப்போது அவளுக்கிருந்த கோபத்தில் வீடு திரும்ப மாட்டாள் என்றே தோன்றியது. . . . -

"நான் அறைக்குப் புறப்படறேன். பத்துமணிக்கு மேலே இங்கேயிருந்து பஸ் கிடையாது. மறுபடி நாளைக்குச் சாயங்காலம்தான் நான் இங்கே வருவேன்' என்றான் அவன். -

"நான் வீட்டுக்டுக்குப் போய் எங்கப்பா முகத்திலே விழிக்கிற எண்ணத்திலே இல்லே. ஒண்ணு இங்கே தங்கிக் கணும். அல்லது சிநேகிதிங்க யாருக்காவது ஃபோன் பண்ணிச் சொல்லிட்டு அங்கே போகணும்' என்று மங்கா முத்துராமலிங்கத்திடம் சொல்லும்போது சிவகாமி நாதனும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவர்ே அவளிடம் சொன்னார் : -

'உனக்கு வசதிக் குறைவு இல்லேன்னா நீ தாராளமா இங்கே என் மகளோட தங்கிக்கலாம் அம்மா! எந்தச் சிநேகிதியையும் தேடிப் போகனும்கிறது இல்ல்ே. என் விட்டிலே செளகரியங்கள் குறைச்சல். அசெளகரியங்கள்

தான் அதிகம்."

'தவறுகளும் தீமைகளும் கலந்த செளகரியங்களைவிட ஒழுக்கமும் நேர்மையும் உள்ள அசெளகர்யங்களே போதும் என்கிற முடிவுக்கு நான் வந்தாச்சு ஐயா!'

'பல பேர் அப்படி முடிவுக்கு வரத்துணியாத காரணத் தால்தான் இன்னிக்கிப் பொதுவாழ்க்கையிலே லஞ்சமும், ஊழலும், முறை கேடுகளும் மலிஞ்சு போயிருக்கு அம்மா!' முத்துராமலிங்கம் அவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸுக்குப் புறப்பட்டான். மங்காவின். புதிய திடீர் முடிவினால் தானும், சிவகாமிநாதனும், அவளும் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக் கும் என்ற சிந்தனையே அப்போதும் அவன் மனத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அவள் இவ்வளவு விரைவில்