பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நிசப்த சங்கீதம்

சிவகாமிநாதனின் மகள் மங்காவைத் தன்னோடு அழைத்துச் சென்றாள். படுப்பதற்கென்று தனி அறை. குளிப்பதற்கென்று தனி அறை. இதெல்லாம் அந்த வீட்டில் இல்லை. சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகளுக்குப்பின் அரசியலைத் தொடங்கி அதை ஒரு லாபம் தரும் வியாபார மாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் மாட மாளிகைகளைக் கட்டிக்கொண்டு வாழும் பலரையும் சிவகாமிநாதனையும் ஒப்பிட்டு நினைத்தாள் அவள். .

அன்று இரவு பதினொரு மணிக்குமேல் இருக்கும். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசையைத் தொடர்ந்து அவளுக்குப் பழக்கமான அந்த ஹார்ன் ஒலியும் கேட்டது. தன் வீட்டிலிருந்துதான் கார் வந்திருக்கிறது என்று மங்கா வுக்குப் புரிந்தது. வேண்டுமென்றே எழுந்திருக்காமல் அயர்ந்து தூங்குவதுபோல் பாசாங்கு செய்தாள் மங்கா. சிவகாமிநாதனின் மகள்தான் எழுந்திருந்துபோய்ப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து. மங்காவை எழுப்பி, உங்கம்மா உன்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க...வாசல்லே காரிலே காத்துக்கிட்டிருக்காங்க' என்றாள்.

ஏன்? உள்ளே வரமாட்டாங்களாமா?' "தெரியலே! நான் கதவைத் தெறந்துபோய்ப் பார்த்

தப்பக்கூட, 'உடனே என் பெண் மங்காவைப் பார்க் கணும்னு’-எங்கிட்டவே எரிஞ்சு விழுந்தாங்க. 'உள்'ர' வாங்க"ன்னு கூப்பிட்டுப் பார்த்தேன். "நான் உள்ளே

எல்லாம் வர முடியாது! என் பெண்ணை வெளியிலே அனுப்பு'ன்னு கத்தினாங்க." - -

அந்த வீட்டையும் அந்த வீட்டு மனிதர்களையும் பற்றி மிகவும் குறைவாக நினைத்துக்கொண்டு அங்கே படியேறி உள்ளே வருவதுகூடத் தன் அந்தஸ்துக்குக் குறைவான காரியம் என்று அம்மா நினைப்பதாகப் பட்டது மங்காவுக்கு. -

நீங்க மறுபடி வெளியிலே போய் அவங்களை உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட வேண்டாம். வரணும்னா வந்துக் கட்டும். இல்லாட்டி எப்படியும் போகட்டும்.'