பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நிசப்த சங்கீதம்

அம்மாவும், டிரைவரும் கதவருகே நின்று கொண்டிருந்த தார்கள் அம்மா சொல்லித்தான் டிரைவர் கதவை. அப்படிப் பலமாகத் தட்டியிருக்க வேண்டுமென்று புரிந்தது. அம்மா சீறினாள்: -

"என்னடீ இது? இதெல்லாம் உனக்கே நல்லாருக்கா? வீடு வாசலைவிட்டு இப்படி யார் வீட்டிலேயோ வந்து உட்கார்ந்துக்கிட்டுக் கிளம்பமாட்டேன்னு அடம் பிடிக் கிறியே?" - - -

'எனக்கு வரப்பிடிக்கலே, வரமாட்டேன்.' "அப்படி நீ சொல்ல முடியாது.டீ சொல்லவும் கூடாது...நல்லதோ கெட்டதோ பொண்ணுங்கறவ வயது வந்தப்புறம் அப்பா அம்மாவோடதான் இருந்தாகணும். இல்லாட்டி மானம் போயிடும்.' -

"அப்பாவுக்கு இருக்கிற மானத்தைவிட இங்கே ஒண்ணும் கொறைஞ்சி போயிடலே அம்மா!' -

'வாயை அடக்கிப் பேசுடி! யாரைப் பத்தி எங்கே. நின்னு என்ன பேசறோம்னு நினைச்சுப்பாரு...ஏண்டீ, இப்படித் திடீர்னு புத்தி கெட்டுப் போனே?" - - "யாரு சொன்னா? போன புத்தியே எனக்கு இப்பத்

தான் கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டிருக்கு...'

"நீ இப்போ எங்கூடப் பொறப்பட்டு வரப் போறியா இல்லியாடீ? உனக்காக நடுத்தெருவிலே நின்னு கத்தி என் மானம் போய்த் தொலையிது!’ - - -

'நீ விடிய விடியக் கத்தினாலும் நான் வரப் போற. தில்லே 'அம்மா! நீ போகலாம். என் சண்டையோ, கோபமோ உன்னோட இல்லே. அப்பாவோடத்தான்..." என்று சொல்லி மீண்டும் கதவை முகத்தை முறித்தாற் போல அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள்

அவள். - . . . . r

தொடர்ந்து சிறிது நேரம் கதவு தட்டப்பட்டது. ஆனால் மங்கா பிடிவாதமாகத் திறக்காமல் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துவிட்டாள். -