பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 15

விளக்கு வைக்கிற நேரத்துக்கு அவன் ஆண்டிப்பட்டிக்குத். திரும்பி வந்தபோது ஏதோ காரியமாக பஸ் ஸ்டாண்டுக்கு. வந்திருந்த பசுங்கிளித்தேவர் அங்கேயே மகனை எதிர் கொண்டார்.

'இந்தா முத்துராமு! உனக்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் போட்டேன். நீ சொன்னபடி நாளைக்கே மெட்ராஸ் போயி அங்கே நம்ம சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வை யைப் பாரு. நான் கடுதாசி தர்றேன். அவரு ஒரு வழி பண்ணிக் கொடுப்பாரு. நமக்கு ரொம்பவும் வேணுங்கப் பட்டவரு தட்டிச் சொல்லமாட்டாருன்னு நினைக் கிலேன். நாளன்னிக்கிக் காலையிலே ஏதோ புது மினிஸ்ட்ரி பதவி ஏற்குதாம். அதுக்காவத் தேனியிலிருந்து அந்தக் கட்சி ஆளுங்க லாரிங்கள்ளே கூட்டம் கூட்டமா. மெட்ராஸ் போறாங்க. லாரிக்காரங்களுக்குக் கட்சி ஆபிஸே பணம் குடுத்துடுது. செலவு மிச்சம். நீயும் அதுலேயே போயிட்டுக் குருசாமி சேர்வையைப் பார்த்தேன் வந்தேன்னு திரும்பி வந்து சேருவியாம்." - .

"சரி. ஐயா!' -என்று இசைவதைத் தவிர அப்போது அவனுக்கு வேறு வழி இல்லை. சிதம்பரநாதன் வீட்டுக் கூட்டத்திலேயே முத்துராமலிங்கத்தின் கதர் அரைக்கைச் சட்டையைப் பார்த்து அங்கு கூடியிருந்த கூட்டம் வெறித் தது. இப்போது அதே கூட்டத்தில் ஒருவனாக லாரியில் விடிய விடியப் போக வேண்டும் என்று. நினைத்தபோது தயக்கமாயிருந்தது; ஆனால் பயமாயில்லை. வாழ்க்கையில்

அவனுக்கு அறவே தெரியாத விஷயங்களில் ஒன்று பயம்.

அப்போது தன் தந்தைக்கு வீண் செலவைத் தவிர்க்க விரும்பி அவருடைய இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண் டான் அவன். தேனியில் கூப்பிட்டிருந்த கவியரங்கத்துக்குப் போக முடியாது. பரவாயில்லை. கவியரங்கங்களைவிட வாழ்க்கை மிகவும் முக்கியமானது. சென்னைக்குப் போய் ஐயாவுக்கு வேண்டிய பெரிய உத்தியோகஸ்தரான குருசாமி