பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - நிசப்த சங்கீதம்

அங்களுக்கு மட்டும் எதுக்காக அதெல்லாம் இருக் கனும்?"

சின் னியின் இந்தக் கேள்வியில் ஒரளவு நியாயம் இருப்ப தாகவே பட்டது. சென்னை என்கிற கலாசார மயா னத்தில் அடியாட்கள் கூட வாடகைக்குக் கிடைத்தார்கள். நல்ல வாடகை கொடுக்க முடிந்தவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். நல்ல வாடகை கொடுக்க முடியாதவர்கள் எல்லாம் அடிபடுகிறவர்களாக, இருந்த்ார்கள். சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான்.

  • *¡; மெட்ராஸுக்குப் பொழைக்க வந்தவனாகத் தெரியிலே...இங்கே வந்து நீ வம்பைத்தான் விலைக்கு. வாங்கிக்கிட்டிருக்கே."

'பொழைக்கிறது அவசியம்தான் சின்னி; ஆனா மான் மில்லாமப் பொழைக்கிறதைவிட அதை எதிர்த்துப் போராடிச் செத்துப்போயிடறதுகூட மேல்னு நினைக் கிறவன் நான்,' - -

முத்துராமலிங்கம் மிகக் கடுமையான குரலில் இதைச் சொல்லவும் சின்னி எதிர்த்துப் பதில் கூறமுடியாமல் நின்று. விட்டான். சிறிது நேரம் வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருந்த பின்,

"என்னமோ, பழகின தோசத்துக்குச் சொல் விட்டுப் போகலாம்னு வந்தேன். அப்புறம் பார்ப்ப்ோம்-என்று. கூறிவிட்டுப் போய்ச் சேர்ந்தான் சின்னி. சின்னி புறப் பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அரசாங்க, முத்திரையிட்ட-கொடி பறக்கிற பெரிய கார் ஒன்று: சிவகாமிநாதனின் வீட்டு வாசலில்வந்து நின்றது. அமைச்சர். எஸ். கே. சி. நாதனே வந்து விட்டாரோ என்றெண்ணி அர்கள் பார்த்தபோது அமைச்சரின் பி. ஏ. யும், ஆளுங் கட்சியின், செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர் ஒருவரும்,

経る。

கரரிலிருந்து கீழே இறங்கினார்கள்.