பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நிசப்த சங்கீதம்

முகமூடியை அவரது மகளே கிழிக்க முன் வருகிறார். மக்கள் :மனக்குமுறல்-கோட்டை கலகலக்கிறது' என்கிற பாணி யில் காரசாரமாக வெளுத்துக் கட்டியிருந்தார்கள். எப்படியோ எல்லாப் பத்திரிகைகளிலுமே தலைப்புச் செய்தி அந்தக் கூட்டமாகத்தான் இருந்தது. முத்துராமலிங்கம், மருத்துவமனையில் காலைப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தான். மங்கா அருகே இருந்தாள். சிவகாமி நாதனின் மகள் வீட்டுக்குச் சென்று முத்துராமலிங்கத் திற்குக் கஞ்சி, வெந்நீர் முதலியன தயாரித்துவர எண்ணிப் போயிருந்தாள். பேப்பர்களைப் படித்துக் கொண்டிருந்த, முத்துராமலிங்கம், . . . . .

"உன்னாலே எத்தனை பிரச்னை பார்த்தியா?" என்று. மங்காவைக் கேட்டான். • ; ;

எங்கப்பா. மனுஷனே இல்லே...ரொம்ப ரொம். ராட் சஸ்த்தனமாப் போறாரு......? . . . .

மனுஷங்க யாரும் அவரு கட்சியிலேயே கிடையாதே? அப்புறம் அவரு மட்டும் எப்பிடி மனுஷனா இருக்க முடியும்?" . . . .

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, கையில் பிளாஸ்குடனும் பையுடனும் அங்கே வந்த சிவகாமிநாதனின் மகள் பதற்றமாக அவனிடம் தெரி வித்தாள்: . . r

கலகத்துக்கும் தீ வைப்புக்கும் துர்ண்டுதல்னு குற்றம்: சாட்டி அப்பாவைக் காலம்பர மூனரை மணிக்குப் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட் டாங்க...'

இதென்ன அக்கிரமாயிருக்கு கலகத்தை எல்லாம். அவங்க ஏற்ப்ாடு பண்ணிப்பிட்டு ஒரு பாவமுமறியாத, இவரைப் பிடிச்சுக்கிட்டுப் போறதா? இதை ரெண்டுைே ஒண்ணு பார்த்துடனும்’ என்று படுக்கையிலிருந்து துள்ளி: எழுந்தான் முத்துராமலிங்கம். 2 : ; - .