பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - - 1 7

அளவுக்குமேல் கூட்டம் பொங்கி வழியத் தொடங்கி யிருந்தது. - ... ." - அந்தக் கூட்டத்தில் மிகச் சில ஆட்களே கட்சிச் சின்னம், பேட்ஜ், அடையாளம் காட்டும் உடைகள் என்று அவற்றை அணிந்திருந்தனர். பெரும்பாலோர் ஒரு பாவமும் அறியாத பொதுமக்களாகவும், பட்டினம் பார்க்க ஆசைப் பட்டுப் புறப்படுகிறவர்களாகவுமே இருந்தனர் என்பை முத்துராமலிங்கம் கவனித்தான். -

அறுபது கோடி.இந்திய மக்களையும் இரண்டே இரண்டு வகைகளில் பிரித்து அடக்கிவிடலாம் என்று அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றியது. 90 : 1.0 என்ற விகிதா சாரத்தில் கொண்டாடுகிறவர்கள்: கொண்டாடப்படுகிற, வர்கள் என்பதாக அவர்களைப் பிரித்துவிட முடியும். தலைவர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று நாடு முழுவதும் பரவியிருக்கும் பத்து சதவிகித எஜமானர்களைக் காரணத்துடனோ, காரணமின்றியோ கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே என்று தோன்றியது. ...

இருநூறு ஆண்டுகளுக்குமுன் இவர்கள் தேர் திருவிழா, சாமி புறப்பாடு, மண்டகப்படி என்று வேறு கொண்டாட் டங்களில் இலயித்திருந்தார்கள். இந்திய ரத்தத்தில் ஊறி யிருக்கும் அந்தக் கொண்டாடும் உணர்வு இன்னும் போய் விடவில்லை, இடம் மாறி இன்றும் நிகழ்கிறது. அன்று தேரில் ஊர்வலம் வருகிறவர்களைக் கும்பிட்ட மக்கள் இன்று காரிலும் விமானங்களிலும் வருகிறவர்களைக் கும்பிட்டு மாலை அணிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

'இந்தா! பசுங்கிளித் தேவரே! உம்ம மகனை அந்த லாரியிலே ஏறிக்கிடச் சொல்லும்' என்று துரிதப்படுத்தி னார் லாரிகள் சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த கட்சிச் செயலாளர். கல்லுடைப்பவர்கள் முதல் களையெடுப்பவர்கள் வரை பல தரத்து ஆட்கள் அந்த லாரியில் இருந்தார்கள். விசுவாசத்தோடு அல்லது கட்சிகளின் கொள்கைகளின்மேல் நம்பிக்கையோடு அவர்கள்