பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

சிறையில் சிவகாமிநாதனைப் பார்த்துவிட்டுத் திரும்பிய

பின், இனிமேல் நீங்கள் நர்ஸிங்ஹோமில் படுக்கையில் தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுப் பிரிக்கிறபோது மட்டும் இங்கே நர்ஸிங்ஹோமுக்கு வந்தால் போதுமானது' என்று டாக்டர் முத்துராமலிங்கத்திடம் சொன்னார். -

அறை நண்பர் சண்முகம் அவனைத் தம்மோடு கோடம் பாக்கத்துக்கே வந்துவிடச் சொன்னார். சிவகாமிநாதனின் மகன் பாண்டித்துரையும், மகள் கஸ்தூரியும் முத்துராம லிங்கத்தை நர்ஸிங்ஹோம் பக்கத்திலிருந்த காரணத்தால் சிந்தாதிரிப்பேட்டையிலேயே ெத ர ட ர் த் து தங்கச் சொன்னார்கள். - - - . . . .

"அப்பா ஜெயில்லே இருக்கிறதாலே அது பத்திரி

கையைப் பாதிக்கக்கூடாது. நீங்களும் மங்கா அக்காவும் இங்கேயேகூட் இருந்திங்கன்னாப் பத்திரிகை வேலைக்கு எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும்' என்றார்கள் சிவகாமிநாதனின் மக்கள்.

அப்போ அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பத் திரி கைக்குப் பாதுகாப்பாகவும் உடனிருக்க வேண்டியது அவசியம் என்று முத்துராமலிங்கத்துக்கே தோன்றியது. சிவகாமிநாதனுக்கு வாக்குக் கொடுத்திருப்பது நினைவு வந்தது. அவன் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தங்க முடிவு செய்தான். - ‘. . . . r

உதவி காமிராமேன் சண்முகம் இரண்டு மூன்று நாட் களுக்கு ஷஅட்டிங் வேலைகள் எதுவுமில்லை என்றுசொன்ன தால், அவரையும் "தன்னோடு தற்காலிகமாகத் தங்க முடியுமா?" எ ன்று கேட்டான் முத்துராமலிங்கம். சண்முகமும் அதற்குச் சம்மதித்தார். மங்கா தங்களோடு அந்த வீட்டில் தங்குகிற வரை தங்களுக்கு அவள் தந்தை