பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 193

போடாதீங்க...சாயங்காலம் கூட்டத்திலே வந்து கேட்டிங் கன்னா அண்ணனையும், தியாகி சாரையும் பிச்சுக் குதறிக் கிட்டிருப்பேன். o

பொறுமை மீறிச் சண்முகம் குறுக்கிட்டார். 'எதுக்குக் கட்சி விசுவாசம், அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பேசlங்க...ரெண்டு பெரிய கள்ளச் சாராய கோஷ்டிங்களுக்கு நடுவிலே சிக்கிக் கிட்டுத் திணறது நமப ஊரு எதுக்கு உண்மையை மறைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அநாவசியமா புத்தர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தனும்?'

"ஏதேது: தியாகி சார் மாதிரியே பேசlங்களே’ "தியாகி சார் கட்சி நடத்தலே. தேர்தலுக்கு நிக்கலே...ஊரை ஏமாத்தலே...லஞ்சம் வாங்கலே. அது னாலே தைரியமா மனசிலே பட்டதைச் சொல்றாரு."

எங்க தலைவர் அப்படி இல்லே! நாங்க கொள்கைக் காகத் தீக்குளிக்கவும் தயார். ... . . .

'அதான் கொள்கைகள் எல்லாத்தையும் இக்குளிக்க வச்சுச் சாம்பலாக்கிப் பத்துப் பதினாலு வருசம் ஆச்சே இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கே...?

"இதுக்கெல்லாம் பதில் சாயங்காலக் கூட்டத்திலே, சொல்றேன்..கேட்டுக்குங்க..." . ‘. . . . . . .

கண்மணி உடம்பைக் கவனித்துக்கொள்ளச் சொல்லி முத்துராமலிங்கத்தை வேண்டி விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சண்முகம் அவள் போவதைப் பார்த்து மங்காவையும் முத்துராமலிங்கத்தையும் நோக்கி அர்த்த புஷ்டியுள்ளதாகச் சிரித்தார்.

சாயங்காலக் கூட்டத்தில் அமைச்சரும், கலையரசி: கண்மணியும் வந்து முதலிலேயே மேடையில் அமர்ந்து விட்டார்கள். முதலில் கட்சியைச் சேர்ந்த நாலைந்து பேட்டை ரவுடிகள் பேசினார்கள். .