பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி в 11

மாலம் அதில் இல்லை. அதனால் சிவகாமிநாதன் தம்முடைய பல வசதிக் குறைவுகளுடன் அந்தப் பத்திரிகை என்ற சிரம ஜீவனத்தையும் சேர்த்து நடத்திவர வேண்டி யிருந்தது. - ஒரு முழு "நைட் ஷிப்ட் வேலை செய்வது போல் அன்றிரவு எல்லாருமே பத்திரிகை வேலைகளில் மூழ்கிவிட நேர்ந்திருந்தது. பதினொன்றரை மணி சுமாருக்குச் சண்முகம் மீண்டும் முத்துராமலிங்கத்திடம் வந்து கெஞ்சி னார். தயவு பண்ணி நீங்க ரெண்டு பேரும் தூங்கப் போங்க...மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். இனிமே இங்கே வேலை ஒ.ண் ணு ம் அதிகமா இல்லே...' . - .

எல்லோரும் தூங்கப் போகலாம்னா நாங்களும் போறோம்...எங்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டா தீங்க...'-என்று பிடிவாதமாக மறுத்தான் முத்துராம லிங்கம். . . . . . -

அதற்கு மேல் யாராலும் அவர்களை வற்புறுத்திப் பணிய வைக்க முடியவில்லை. தந்தையின் அரசியல்அதிகாரப் பதவி ஊழல்களைப் பற்றி மங்கா எழுதியிருந்த இரண்டாவது பகுதிக் கட்டுரை அந்த இதழ் தியாகியின் குரலில் வெளி வந்திருந்தது. இந்தக் கட்டுரைகள் எதிர்த் தரப்புக் கட்சிகள். மனிதர்களிடம் உண்டாக்கியிருந்த திர பரப்பைவிட மந்திரி எஸ். கே. சி. நாதன் சார்ந்திருந்த ஆளுங்கட்சித் தரப்பிலேயே அ தி.க ப் பரபரப்பை உண்டாக்கியிருந்தன. - -

ஆளுங்கட்சியிலிருந்த பிரமுகர்கள். தலைவர்கள், எஸ். கே. சி. நாதனின் சக மந்திரிகள் ஆகியோருக்குத் தியாகியின் குரல் பத்திரிகையைப் பார்ப்பதிலும் படிப்பதி லும் இப்போது ஒரு தனி அக்கறை ஏற்பட்டிருந்தது. ஒரு வருக்குத் தெரியாமல் மற்றொருவர் தியாகியின் குரல் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிக்கத் தலைப்பட் டார்கள், இவைபோன்ற விளைவுகளுக்காகத்தான் மந்திரி