பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 227

மங்கா அந்தப் போலீஸ் அதிகாரியை நோக்கி, இந்தத் தவறான காரியத்துக்காகப் பின்னால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்' என்று கூறியதைப் பொருட் படுத்தாமல் முத்துராமலிங்கத்தினருகே போலீஸ் ஜீப்பைக் கொண்டு வந்து நிறுத்தினார் அவர். கூட்டம் தடுத்தும் பொருட்படுத்தாமல் பலவந்தமாக முத்துராமலிங்கத்தைப் போலீஸ் ஜீப்சிலும் ஏற்றிவிட்டார் அவர். மங்காவும் கூட்டத்தினரும், போலீஸ் கெடுபிடி ஒழிக! முத்துராம விங்கத்தை விடுதலை செய்' என்ற கோஷங்களை எழுப்பி னாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஜீப் மெல்ல நகரத் தொடங்கியது.

33

யாரையும் எப்போதும் எந்த சந்தேகத்திற்காகவும் உடனே கைது செய்யலாம் என்ற வகையில் இயற்றப்பட் டிருந்த ஒரு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. நடந்ததை எல்லாம் பார்த்தால் ஏதோ திட்டமிட்டுக் கெடுதல் செய்ய, யாரோ முயன்று செயலாற்றுவதுபோல்தான் தோன் .lயது.

மங்காவும், தொண்டர்களும் எல்.எல்.ஏ. பில்டிங்கி லிருந்து வீடு திரும்பித் தியாகி சிவகாமிநாதனிடம் நடந்த விவரங்களைக் கூறினார்கள். முத்துராமலிங்கம் பாடிய கவிதையின் மற்றொருபிரதி மங்காவிடம் இருந்தது. அதை அவள் அவரிடம் கொடுத்தாள். வாங்கிப் படித்துவிட்டு, இந்தக் கவிதையில் தேசவிரோதமாகவோ, சட்ட விரோத மாகவோ எதுவுமே இல்லையே அம்மா தேசத்தைப்

பற்றிக் கவலைப்பட்டு அக்கறை காட்டும் தொனி அல்லவா : இதில் கேட்கிறது? எதற்காகவோ கைது செய்யத் திட்ட மிட்டிருக்கிறார்கள். "நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது. சாக்கு' என்று இதை வைத்துக் கைதுசெய்திருக்கிறார்