பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 திசப்த சங்கீதம்

செலவில் இப்படி நாலு பிரயாணம் போவதுதானே நடை முறை, அவர் ஊரில் இல்லாததால் இவர்களுக்கு அதிகத் தொல்லைகள் ஏவி விடப்படவில்லை. குறைந்த பட்சத் தொல்லைகள் இருக்கத்தான் செய்தன. ஒருநாள் மாலை இருட்டிய பின் கிரீன்வேஸ் ரோட்டிலிருந்து அம்மா மங்க வைத் தேடி வந்து பார்த்துவிட்டுப் போனாள். . .

வழக்கம்போல் தெருவில் காரிலிருந்தபடியே, டிரைவர் மூலம் அவளைக் கூப்பிட்டனுப்பித்தான் பேசினாள் அவள். - - -

வழக்கமான திட்டு, வசவு, சாபம் எல்லாம் முடிந்த பின், அப்பாதான் ஊரில் இல்லையே? நாலுநாள் எங்ககூட வீட்டில்ே வந்து இரேன்...நான் தனியாஇருக்கேன்"-என்று அம்மா ஆரம்பித்தபோது, மங்கா கண்டிப்பாக அதற்கு மறுத்து விட்டாள். - -

அமெரிக்காவிலிருந்து அப்பா திரும்பும்போது லண்டன் வந்து பர்மிங்ஹாம் போய் அண்ணனோடு ஒருவாரம் தங்கி விட்டு வரலாம் என்று அம்மா .ெ த ரி வி த் தா ள். மங்காவை எப்படியாவது நைச்சியமாகப் பேசி மனமிளகச் செய்து தன்னோடு வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விடவேண்டுமென்று அவளுடைய அம்மா செய்த முயற்சி அவ்வளவும் வீணாகி விட்டது. - -

"என்னடீ இப்படிக் கறுத்து முகமெல்லாம் குழி விழுந்து இங்கே பஞ்சத்திலே அடி பட்டவ மாதிரி ஆயிட் டியே? சரியாச் சாப்பீடறியா இல்லியா?' என்று அம்மா கேட்டபோதுகூடத் தன்னைத் தாழ்வு உணர்வில் சிக்க வைக்க அவள் முயல்வதை மங்கா சரியாகப் புரிந்து கொண் டாள். * . . . . . . . . . . .. - -

நான் நல்லத்தான் இருக்கேம்மா! உன்னைப் பார்த் தாத்தான் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கு?"

"ஆமாண்டி பேச மாட்டியா பின்னே? பறிகொடுத்த தாலேதானே இப்பிடிக் கண்ட கண்ட எடத்துக்கெல்லாம்

நான் உன்னைத் தேடி அலைய வேண்டியிருக்கு'