பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 245

முத்துராமலிங்கத்துக்கு அவர் கூறிய செய்தி வேதனை யளிப்பதாக இருந்தது. தேசபக்தியும், பொதுத்தொண்டும் வீசை என்ன விலை என்று கேட்கக்கூடிய சந்தர்ப்பவாதி களான பலர் கோடி கோடியாகப் பணம் பண்ணக்கூடிய காலத்தில் சிவகாமிநாதன் போன்ற சத்ய விவசாயிகள் வீடு வாசலைக் கடனுக்குப் பறி கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பது நெஞ்சைப் பிழிந்தது. எண்ணத்தை உருக்கி அழ வைத்தது. - * . . . . . . . .

அரசாங்கம் தானே அவருக்குத் தியாகிகளுக்குரிய மாதாந்திரப் பென்ஷன் கொடுக்க முன்வந்து விவரங்களை விசாரித்தபோதுகூட, 'என் தியாகம் நாட்டுக்காக தானே விரும்பிச் செய்த தொண்டு ஆகும். அதற்கு விலை தர உங்களுக்கும் தகுதியில்லை. பெற எனக்கும் விருப்பமில்லை. என்று கடுமையாக மறுத்துப் பதில் எழுதிவிட்டார் அவர்.

விலை மதிக்கமுடியாத உயர்ந்த சாதனைகளைச் சுலப. மாக அவமதிக்கும் வழி அதற்கு மிகவும் மலிவான ஒரு விலையை நிர்ணயிக்க முயல்வது தான்'- என்று. சிவகாழி

நாதனே அடிக்கடி கூறுவது உண்டு. * : * * ...'

அன்று மாலையிலேயே முத்துராமலிங்கமும் காமிரா மேன் சண்முகமும், வேறு சில நண்பர்களும் ஓரிடத்தில் - . . சந்தித்து ஆலோசனை செய்தார்கள். . . . . .

"இன்றுள்ள சூழ்நிலையில் சிவகாமிநாதனைப்போன்ற உத்தமர்களைக்காக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எல்லாருக்கும் பயன்படக்கூடிய நல்ல மருந்து மரம் ஒன்று ஊர் ந்டுவே இருப்பதுபோல் இன்று நம்மிடையே அவர் இருக்கிறார். இன்று அவரைப் பாதுகாக்க வேண்டியது.அவர் நலனுக்காக மட்டுமல்லாமல் நம் நலனுக்காகவும் நாட்டு: நலனுக்காகவும்கூட அவசியமாகிறது'- என்று தொடங்கி அவருடைய கடன் தெர்ல்லைகளை விளக்கினான் முத்து: ராமலிங்கம். அவருக்கு வயது வந்த் மகள் ஒருத்தி: கலியாண்த்துக்குக் காத்திருப்பதையும் கூறினான்.

£–16