பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 - நிசப்த சங்கீதம்

அன்றே எல்லாருமாக முடிவு செய்து சில உதவி நாடகங்கள் மூலம் தாங்களே முயன்று பெரிய அளவில் டிக்கெட் விற்பனை செய்து அவருக்குக் கணிசமாக ஒரு நிதி திரட்டிக் கொடுத்துக் கடன்களை அடைக்கத் திட்டமிட்ட னர். சில நாடகக் குழுக்களின் தலைவர்கள் சிவகாமிநாதன் மேல் அபார்பக்தி வைத்திருந்தனர்.அவர்கள் இந்த ஏற்பாட் டுக்கு உடனே இசைந்தனர். சிவகாமிநாதன் இப்படி நிதி வசூலை ஏற்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்தை மட்டுமே அவர்கள்முதலில் தயக்கத்தோடுதெரிவித்தார்கள். அவர் ஏற்பதாக இருந்தால் அவருக்கு உதவுவதைப் போல் தங்களுக்கு மனநிறைவு அளிக்கும் காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதையும் உற்சாகமாகத் தெரிவித்

னர். . - . . -

தியாகியின் குரல் உதவி நாடகங்களுக்கு ஏற்பாடா யிற்று.சண்முகமும் முத்துராமலிங்கமும் மங்காவும்டிக்கெட் விற்பனையில் முழு மூச்சாக இறங்கினார்கள். எப்படியோ விவரம் அறிந்து தியாகி சிவகாமிநாதன் அவர்களை கூப்பிட்டுக் கண்டித்தார் கடிந்து கொண்டார்.

இது எனக்குப் பிடிக்கவில்லை! இப்படி எல்லா அரசியல் ஆட்சிகளும் செய்கின்றன. எனக்காகவும் இப்படி மடிப்பிச்சை எடுக்கக் கிளம்புகிறீர்களே?"

முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும்.பல மணி நேரம் விவாதித்து அவரை அதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்துே. அவர்களுடைய வற்புறுத்தலுக்கும், விவாதத்திற்கும் பிறகு வேண்டாவெறுப்பாக அவரும் அதற்குச் சம்மதித்திருந்தார். . - ---- ... -

சிவகாமிநாதனின் கடன் பளுவை குறைப்பதற்காக அவர்கள் ஏற்பாடு செய்த நேரம் அவரது மணிவிழாச் சமய மர்கவும் இருந்தது. பண்பட்ட அறிவாளிகளும் பெரியோர். களும் தங்கள் சொந்தக் கஷ்டங்களைப் புன்னகை மாறாத மலர்ந்த முகத்தாலும் பெருந்தன்மையாலும்