பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 249

போல் செயலாற்றிக்கொண்டிருந்தன. தன் கட்சிக்காரன் என்ன தவறு செய்தாலும் கொண்டாடின, எதிர்க்கட்சிக் காரனின் தவறுகளைப் பெரிதுபடுத்தின. தவறு செய்தி தன்னவர்களைப் பாதுகாக்கும் நிரந்தர ஏற்பாடுகளா கவே சில கட்சிகள் இருந்தன. தவறு செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் புரிகிறவர்கள் எந்தக் கட்சியிலிருந் தாலும்கெட்டவர்களே என்றமுனைப்போடு செயல்பட்டது சிவகாமிநாதனின் இயக்கம், "நெற்றிக் கண்ணைத் திறற் தாலும் குற்றம் குற்றமே" - என்று அந்த நெற்றிக்கண் பார்வையின் சூட்டில் வெதும்பிக்கொண்டே நிமிர்ந்துநின்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் அதனால் இவர்களுடைய குற்றச்சாட் டால் பாதிக்கப்பட்ட அத்தனை தலைவர்களும் கட்சிகளும் இவர்களைச் சபிக்கவும் வெதுப்பவும், துன்புறுத்தவும் தீவிர .மாக முனைந்தனர். . .

சிவகாமி நா தனி ன் மணிவிழாவை அவர்கள் கொண்டாடிய ஐந்தாறு மாதங்கள் கழித்து முன்பே எப்போதோ அரசாங்கம் அவர் மேல் போட்டிருந்த ஒரு பொய் வழக்கு விசாரணைக்கு வந்தது. பத்திரிகைகள் அது பற்றி அன்றாடம் பரபரப்பாகச்செய்திகளை வெளியிட்டன.

அரசாங்கமும், ஆளும் கட்சியும் பயமுறுத்திப் பலர்ைப். பொய்ச்சாட்சி சொல்லச் செய்திருந்தார்கள். துரதிர்ஷ்ட வசமாக வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகி அவர் இரண் டாண்டுகள் சிறைச் சாலைக்குச் செல்லவேண்டும் என்று முடிந்திருந்தது. சிறைக்குப் போதமுன் முத்துராமலிங்கம்

முதலியவர்களிடம் சிரித்தபடியே கூறினார் அவர் :

'மகாத்மா காந்தி தலைமையில் இந்த நாட்டின் சுதர் திரத்திற்காகப் பிரிட்டீஷ்காரர்களை நான் எதிர்த்துப் போராடின போதும் சிறைவாசம்தான்.எனக்குப் பரிசாகன் கிடைத்தது. என் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்: திர நாட்டிலும் இப்போது சிறைவாசம்தான் எனக்குப் பரிசாகக் கிடைக்கிறது: . . . . . . . . " . جه