பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நிசப்த சங்கீதம்

களின் விலையை விசாரித்த போதோ கிழவி' முத்துராம லிங்கத்தை ஒரு தினுசாகப் பார்த்தாள். . .

பின்பு அவள் நசுங்கிய அலுமினியத் தட்டில் வைத்துக் கொடுத்த இரண்டு ஆப்பங்களையும் இரண்டு இட்லியையும்: சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டபோது வெயில் சுள்ளென்று உறைக்க ஆரம்பித்திருந்தது. . - -

சிாலைகள், பூங்காக்களின் முகப்பு மைதானம், தெரு. முனை எங்கு பார்த்தாலும் கொடிகள், துணி பேனர் களுடன் வெளியூரிலிருந்து வந்திருந்த லாரிகள், பஸ்கள் வேன்கள்தான் தென்பட்டன. எங்கே வந்தோம் எதற்காக, வந்தோம் என்று புரியாத கூட்டம் நிரம்பி வழிந்தன. தேச பக்தியும், விவேகமும் நாட்டு நிலையும் புரிந்த யாராவது ஒரு தலைவன் மட்டும் இத்தனை பேரையும் ஒருநாள் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து ஒர் உருப்படியான காரியத்துக் காக உழைக்கவைக்க முடியுமானால் பல மைல் நீளம் ஒரு கால்வாயை வெட்டிவிடலாம். பெரியதொரு நீர்த்தேக்கத். துக்கான அணையைக் கட்டி விடலாம். ஆனால் இன்றைய இந்தியத் தலைவர்கள் தங்களுக்குக் கைதட்ட' என்றே. கோடிக்கணக்கான மக்களை ஒன்று திரட்டுகிறார்கள். நாட்டுக்கு உழைக்க என்று அவர்களை ஒன்று திரட்டுவ: தில்லை. - - r

மாநிலக் கல்லூரி என்று பெயர்ப் பலகை தெரிந்த ஓரிடத்தில் அவன் சிறிது நின்றான். உள்ளே தென்பட்ட அதிகம் கவனிப்பாரற்றிருப்பது போன்ற ஒரு சிலையை நிதானமாகப் பார்த்தான். தமிழ்த் தாத்தா உ. வே. சாமி நாத ஐயரின் சிலை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதைப் பார்க்காமலே போய்க் கொண்டிருந்தார்கள். அவரை நிமிர்ந்து பார்க்கத் தோன்றாமலே அதே பாதையில் வடக்கு. நோக்கியும் தெற்கு நோக்கியும் விரைந்து கொண்டிருந்:

தார்கள். * . . . . . . . . . . . .

வழியருகே மிகப் பக்கத்தில் அமைதியாக நிற்கும் புண்ணிய சிலர்களையும், தெய்வங்களையும் கவனிக்காமல்,