பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷8... நிசப்த சங்கீதம்

அது சரி சின்னி! உங்க ஊரு என்னன்னே சொல்லவியே?’’ - - - -

"மரக்காணம்...பாண்டிச்சேரிக்குப் போற வழியிலே கீது.'... - -

முத்துராமலிங்கத்தால் அவனை முழுமையாக வெறுக் கவும் முடியவில்லை. விரும்பவும் முடியவில்லை. 'இவனைப் போல் நல்லவனாக இருக்க முடியாத காரணத்தால் சூழ்: நிலையால் செட்டுப்போனவர்களையாவது மன்னிக்கலாம். நல்லவர்களாக இருப்பதுபோல் உலகுக்குப் பாசாங்கு காட்டிக் கொண்டே கெட்டவர்களாக இருப்பவர்கள்ை மன்னிக்கவே முடியாதென்று தோன்றியது. சாப்பிட்டுக். கொண்டிருக்கும்போதே பலர் வந்து வணங்குவதும், விசாரிப்பதும், குழைவதுமாகச் சின்னிக்கு அங்கே ஏகப் பட்ட மரியாதை உபசரனைகள். எல்லாம் நடந்தன.

'வந்தாக் கிடைக்குமா?..வரட்டுமா?’ என்று ஒரு. சில்க் ஜிப்பா ஆசாமி ஜவ்வாது வாசனையை வாரி இறைத்தபடி வந்து அருகே நின்று சின்னியைக் குழைவாக விசாரித்தார். சின்னி சிரித்தபடி ப்தில் கூறினான்:

"நம்பர் "ஒன்லே புதுச்சரக்கு எதுவும் வரலே! நம்பர் டுவிலே புதுச்சரக்கு நெறையவே வந்திருக்கு சார்.'. அப்ப நாளைக்கு வரேம்பா" -

அவர் போனதும், "இதுமாதிரி இந்த வட்டாரத்திலே, ந்மக்கு எத்தினியோ கஷ்டமருங்க"...என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே சின்னி முத்துராமலிங்கத்திடம் கூறினான். -

கஷ்டமர் இல்லே "கஸ்டமர்’னு சொல்லனும், சின்னி: - - . . . . .

அந்த எ ள ைவ ச சொல்றதுக்குக் கஷ்டமா யிருக்குப்பா! அதான் கஷ்டமர்னே வச்சுப்புட்டேன்." -

"இப்போ வந்து கேட்டுட்டுப் போறாரே, இவரு யாரு?’’. - . . "