பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நிசப்த சங்கீதம்

நாய் ஒன்று ஓடி வந்து சின்னியிடம் வாலைக் குழைத்தது. சின்னி அதைத் தடவிக் கொடுத்தான். - -

'வாப்பா உள்ளாரப் போகலாம்' -முத்துராமலிங் கத்தை உள்ளே அழைத்துச் சென்றான் சின்னி. அங்கிருந்த ஆட்கள் எல்லாருமே சின்னிக்கு அபார மரியாதை செலுத் தினார்கள். . .

வீடுதான் மனிதர்கள் அதிகம் பழகாத பாழடைந்த மாளிகை போல இருந்தது. கூடத்தில் போய் உட்கார்ந் த்தும் அங்கிருந்த வயதான ஆயா ஒருத்தியைக் கூப்பிட்டு, 'வரச் சொல்லும்மா...என்று சத்தம் போட்டுச் சொன் னான் சின்னி. - - . .

நன்றாக அலங்கரித்த நிலையிலும் அலங்கோலமான நிலையிலும் அழகான உடற்கட்டோடும் அதைக் காண் பிக்கும் முயற்சியோடும் கும்பலாக ஏழெட்டு இளம் பெண் கள் முத்துராமலிங்கத்துக்கு முன்வந்து நின்று சிரித்தார்கள். சிரிப்பு இயல்பாக இல்லை. யாருக்கோ பயத்து வரவழைத் துக் கொண்ட சிரிப்பு மாதிரி இருந்தது. -

'இவளுகள்ளே யாரை ஒனக்குப் பிடிக்குதுன்னு பாரு...' - .

முத்துராமலிங்கம் சின்னியை நோக்கிச் சிரித்தான். பின்பு அந்தக் கட்டழகுக் கூட்டத்தின் அணி வகுப்பையும் அவர்களையும் இமையாமல் பார்த்தான். . .

8

கடற்கரையில் பொதுக் கூட்டம் கேட்டுக் கொண்டி நந்தபோது தன் ஒருவனுக்கே ஆயிரம் கைகள் முளைத்து அவை அத்தனையையும் கொண்டு தீமைகளையும் பொய். க்ளேயும் எதிர்த்துச் சாட வேண்டும் என எண்ணினாற் ப்ோலவே இந்தக் கணித்திலும் எண்ணினான் முத்துராம்

லிங்கம்."