பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - * , 66

தெலுங்கிலும், தமிழிலும், மலையலத்திலுமாக இனிய சோகக் குரல்கள் காதில் விழுந்தன. . - முத்துராமலிங்கத்தைக் கண்டதும் அவர்கள் தங்களுக் குள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த நோக்கில் பார்வைகளையும், முனு முணுப்புக்களையும், புன்னகை களையும் பரிமாறிக் கொண்டனர். ஒரு 'கான்சென்ட். ரேஷன் கேம்ப் அல்லது கைதி முகாமில் வாழ்வது போன்ற அவர்கள் வாழ்க்கைக்கு நடுவே சிரிக்கவும், மகிழவும்கூட இப்படிச் சில விநாடிகள் கிடைக்க முடியும் என்பது முத்து ராமலிங்கத்துக்கு வியப்பை அளித்தது. -

முத்துராமலிங்கம் அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு சின்னியோடு வெளியே புறப்பட்டான். அந்த பங்களாக் காம்பவுண்டுக்கு .ெ வ ரி யே வந்தவுடனே சுவரருகே பதுங்கினாற் போல ஒண்டிக் கொண்டிருந்த ஓர் இளம் பெண் கொஞ்சம் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளும் அதனின் டயே பொங்கும் அழகுகளும், கவர்ச்சி யுமாக இருந்தவள் எழுந்து ஒடத் தலைப்பட்டாள்.

"ஐயோ! என்னை விட்டுடு...... என்னை விட்டுடு.... கொன்னுப்புடாதே...." .

அவள் சின்னியைக் கண்டே அப்படி அலறி ஓடுவதாகத் தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. பளிச் சென் Jol செண்பகப்பூ நிறம். கருமணலாக அலையோடி நெளி நெளியாகப் படிந்து தூசியுற்று மங்கிய கூந்தல்...சோகமும் அழகின் சுகமும் ததும்பும் கண்கள். நல்ல உயர்ம், கனிந்த உடல்வாகு......அவளுக்குப் பைத்தியம் பிடித்தது எதனால் என்று யோசித்து முத்துராமலிங்கம் மனம் குழம்பினான்.

சின்னியைக் கண்டதும் அவளுடைய ஒட்டமும், அலற ஆம் அதிகமாவதாக அவனுக்குத் தோன்றியது.

'நம்ப குட்டிதான். இங்கே இருந்தா.....பைத்தியம் பிடிச்சப்புறம் இதுமாதிரி ஆயிடிச்சு...ரொம்ப ஷோக்கான பொம்பிளை...பாவம்...இப் இப்படி அலையிறான்......