பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - - நிசப்த சங்கீதம்

அவளையும். மங்காவையும் ஒப்பிட்டான் முத்துராம லிங்கம். -

தந்தையின் பரம்பரையான பொருளாதார வசதியோடு கூடிய பெரிய மனித தன்மைத் அரசியலில் செல்வாக்குள்ள பெரிய பதவி, இங்கிலாந்தில் வசதியான உத்தியோகத்தி லிருக்கும் மூத்த சகோதரன் எல்லாரும் எல்லாமுமாகச் சேர்ந்து இந்த மங்காவுக்கு அளித்திருக்கும் வாழ்க்கைப் பாதுகாப்பையும் உற்சாகத்தையும், ஏழ்மையால் விபசார விடுதிக்கு வந்து பின்பு தெருவுக்கும் வந்துவிட்ட அவள் அடைய வழியின்றித் தான் அப்படிச் சீரழுந்துவிட்டாள் என்று தோன்றியது. அவளது மிரண்ட பார்வையும் "என்னை விட்டுடு' என்ற புலம்பலும் மீண்டும் அயனுக்கு வந்தன. . . . . . ... . . . . . .

பண வசதியும், செல்வாக்கும் இல்லாதவர்களின் வாழ்க்கைகளும் நியாயவாதங்களும் எவ்வளவிற்குப் பாது காப்பற்றவையாக இருக்கின்றன என்பதை நினைத்தபோது அவனுக்கு இனம்புரியாத-விலாசம் புரியாத யார்மேல், எதன்மேல், ஏன் என்றெல்லாம் பிரித்து விளக்க முடியாத தோர் ஆத்திரம் தாறுமாறாக மூண்டது. அந்த ஆத்திரத் இன் செலுத்தப்பட வேண்டிய இலக்குப் புரியாவிட்டாலும் அப்போது அதைத் தவிர்க்க முடியவில்லை. டிர்ைவ் இன்னில் காரில் இருந்தபடியே சிற்றுண்டிக்கு ஆர்டர் செய் தாள். மங்கா. அவள் இழுத்த இழுப்புக்கு இழுபட்டுச் சொன்னபடியெல்லாம் கேட்டுச் கொண்டிருக்கிறோமோ என்ற உறுத்தல் இத்துராமலிங்கத்தின் மனத்தில் இருந்தது. அதனால் துணிந்து, காரில் உட்கார்ந்து சாப்பிட வேண்டாம்! எனக்குப் பிடிக்கல்லே! கீழே இறங்கி நாற்காலி மேஜைக்குப் போகலாம்!" என்றான் அவன்.

....ஒ. எஸ். தாராளமாக அப்படியே செய்யலாம்' என்று வெயிட்டரைக் கூப்பிட்டு ஆர்டரைக் கேன்ஸ்ல்9த்தபின் அவனோடு இறங்கி நடந்தாள் மங்காட்), ஊர்ல ரொம்பப் பேர் கீழே இறங்கித் தெருவிலே