பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 73

காபியைப் பருகிக் கொண்டிருந்த அவன் கப்பைமேஜை மேல் வைத்துவிட்டு நிதானமாக அவளைப் பார்த்தபடி

சொன்னான்: - -

"இதுவரை விலாசம் என்று எதுவும் எனக்குக் கிடைக்க வில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் நிலைமைதான். .கிடைத்ததும் உங்களுக்கு எழுதுகிறேன்.'

"எங்கப்பா மூலமாச் சொல்லி ஏதாவது யூத்ஹாஸ்டல் அல்லது ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸ் ஹாஸ்டல்லே தங்க எடம் வாங்கித் தரட்டுமா?’

வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்,' - "நான்.முதல்லே பார்க்கறப்பக்கூட இருந்தாரே அவரு யாரு...!" - -

'அவனா? அவனோட முழுப் பேரு சின்னராஜ். செல்லப் பேரு சின்னி.புதுசா இங்கே சிநேகிதமானவன்! ரொம்ப நல்ல மாதிரி..." - . . . . . .

கார் புறப்படும்போது அவனை எங்கே விடவேண்டு. மென்று சிரித்தபடியே கேட்டாள் மங்கா. அவன் கிருஷ்ணாம்பேட்டைக்கு அருகே அடையாளமாக வெங்க டேஸ்வரா ஹாஸ்டல் பக்கத்தில் என்றான்.

அவளுக்கு அந்த இடம் தெரியவில்லை. ஆனால் காரை ஒட்டி வந்த டிரைவர் சென்னைக்காரனாக இருந்ததால் அவனுக்குத் தெரிந்திருந்தது. டாக்டர் நடேசன் சாலையும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையும் சந்திக்கிற இடத்தில், போலீஸ் ஸ்டேஷன் அருகே முத்துராமலிங்கத்தை இறக்கி விட்டாள் மங்கா. - - - -:

அவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிழக்கே கடற்கரை போகும் சாலையை நோக்கி நடந்து நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூல் முனையில் இருசப்ப கிராமணி தெரு அக்காகத் திரும்பியபோது அங்கு ஒரே கலவரமாக இருந்தது. நடுத்தெருவில் சோடா புட்டிகள் உடைந்து கண்ணாடிச் சில் சிதறியிருந்தது. கடைகண்ணிகள் அடைக்