பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - நிசப்த சங்கீதம்

களோடு கிடைக்கிற புழுதிபடிந்த தரையையே சிலாக்கிய மானதென்று விரும்புவேன் நான். ஆகவேதான் எங்கே உங்க ஆளுங்களுக்கு நடுவே வந்து தங்கச் சிம்மாசனத்தை, அடைஞ்சிட நேருமோன்னு நடுநடுங்கிப் பயந்துக்கிட்டே. வாழ வேண்டியிருக்கு...' - . . . . . - சொல்லிவிட்டு அவளை நோக்கிச் சிரித்தான் அவன்.

பணம், பதவி. செல்வாக்கு எல்லாம் கிடைக்கிற தோட எங்க இயக்கத்துக்குள்ளே வந்து சேர்ந்திட்டா என்னை மாதிரி அழகான பொம்பளைங்களும் தாராள் மாவே கெடைப்பாங்க' என்று விஷமத் தனமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்வி: கண்மணி திடீரென்று ஒரு வெறியோடு கைகள்ை நீட்டிக்கொண்டு அவனைத் தழுவிக் கொள்வதற்குப் பாய்ந்தாள். - - முத்துராமலிங்கம் நிதான த்தோடு பதறாமல் அவளைத் தடுத்து நிறுத்தினான். சொன்னான்: '

'எனக்குப் பயம் வந்தது தப்பில்லேன்னு இப்பப் புரியுது.' . . . . . . . . . .. -

பயப்படறத்துக்கு நான் என்ன பேயா, பிசாசா, பூதமா?' ' . . . . . .

"பேய், பிசாசு, பூதங்களுக்காகக் கூட நான் இவ்வளவு தூரம் பயப்படுவதில்லை." - w

கண்மணி அடிபட்ட புலியாகச் சீறினாள். அவள் மனத் தின் மிக மிருவான உணர்வுப் பகுதியை அவமானப்படுத் திப் புறக்கணித் விட்டதன் மூலம் அவளுடைய ஆக்ரோ ஷத்தைச் சீண்டி விட்டிருந்தான் முத்துராமலிங்கம்.

நீங்க மனுஷனே இல்லே. உங்க பார்வையிலே தான் அப்படிப் படறதைப்பற்றி: ரொம்ப சந்தோஷம். நான் மிருகமில்லாத காரணத் தால்-நீங்கள் விரும்பியபோது விரும்பியபடி, உடனே, மிருகமாக மாறாக காரணத்தால் இந்த நற்சான்றிதழை என க்கு நீங்கள் தருகிறீர்கள். -