பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7

"ஏன்கறேன்?’’ . 'காலேஜுங்கள்ளேருந்து பி. யூ. சி.யை எடுத்துப் போட்டு ஹைஸ்கூலுங்கள்ளேயே பிளஸ் டுன்னு ஒரு கிளாலைச் சேர்த்தப் பெறவு இப்போ இப்படி மாத்திப் பிட்டாங்க. எம்.ஏ. மட்டும் படிச்சவங்க இந்த மாதிரி :ளஸ்டு ஸ்கூல்லேதான் வேலைக்குச் சேர்முடியும்.'

"அது ஏன் அப்பிடியாம்? பொழுதண்ணைக்கும் யாராச் .சும் ரெண்டு மந்திரிங்க தமிழைக் கட்டிக்காப்போம், தமிழ் படிச்சவங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்னு எங்கேயாவது பேசிக்கிட்டிருக்காங்களே? கட்டிக் காக்கிற லட்சணம் இதுதானா? - .

அதெல்லாம் ரொம்பத் தாராளமாகவே பேசுவாங்க ஐயா! பேசறதுக்கென்ன பஞ்சம் வந்திச்சு?"

அவ்வளவில் அவர் பல் விளக்கக் கிணற்றை நோக்கி நடக்கவே முத்துராமலிங்கம் மறுபடி வேப்ப மரத்தடியில் வந்த கவிதை எழுத உட்கார்ந்தான். ஆனால் முதலில் எழுத உட்கார்ந்தபோது இருந்த மாதிரி மனம் இப்போது இலகுவாக இல்லை. அப்போது பூக்குடலையைச் சுமப்பது போலக் கனமற்றும் இதமாகவும் மென்மையாகவும் இருந்த மனம் இப்போது பாறாங்கல்லாகக் கனத்தது. எதுவும் எழுத வரவில்லை. - -

காகிதக் கற்றைகளை எதுவும் எழுதாமல் அப்படியே மடித்துச் சட்டைப்பையில் சொருகிக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான் அவன். . . -

"ஆத்தாr ஒரு பத்து ரூபா பணம் குடு. மதுரைக்கிப் போயி யூனிவர்ஸிடியிலே கொஞ்சம் சர்டிபிகேட் எல்லாம் வாங்கணும்.' - -

கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்துப் பழக்கங்கள் வந்தபின் ஒவ்வொரு தடவை தாயை விளிக்கும் போதும் இந்த ஆத்தா'வை விட்டு விட்டு 'அம்மா’ என்பதாக மாற்றவேண்டும் என்று எண்ணி அந்த மாற்றமும் புதுப் பெயரால் திடீரென்று விளிப்பதும் தன் தாயை அந்நிய