பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தச πσ தி 89

கீழே நாய் இடைவிடாமல் குரைக்கும் ஒலியில் போலீஸாரின் துரத்தும் அதட்டல்களும் கைவளை, ஒசை களும், பெண்களின் பயங்கலந்த குரல்களும் இணைந்து கரைந்தன. பல ரெய்டுகளைச் சந்தித்து அதுபவமும் பழக் கமும் உள்ள வாட்ச்மேன், ஆயா, ஏவல்கூவல் வேலைக்காக இருந்த எடுபிடிச் சிறுவர்கள் எல்லாருமே சுவரேறிச் குதித்துத் தப்பி ஓடியிருப்பார்கள் என்று தோன்றியது. அவர்களுடைய குரல்கள் கீழ்பக்கம் கேட்கவில்லை. துரத்தப்பட்டும், விரட்டப்பட்டும். யாராலோ, யாருக்கோ விற்கப்பட்டும் வந்திருந்த அந்த அபலைப் பேண்கள் மட்டும்

மாட்டிக்கொள்வதா என்று சிந்தித்தான் அவன், சமூகத்தின் ஒட்டு மொத்தமான கூட்டுத் தவறுகளுக்குக் கூட அபலைகள், நிராதர வானவர்கள். அப்பாவிகள்

மட்டுமே பொறுப்பாவதும் இப்படித்தான் என்று. தோன்றியது. -

தான் மட்டும்.ஒளிந்து மறைந்து தப்ப வேண்டுமென்ற முனைப்புக்கும் பயத்துக்கும் என்ன காரணம் என்று தனக்குத் தானே சிந்தித்தான் அவன். ஒவ்வொரு பயத்துக் கும் ஒரு சுயநலம்தான் காரணம் என்று புரிந்தது. சுயநலம் தான் பயப்பட வைக்கிறது. சுயநலம்தான் தனது குற்றத் தைப் பிறர் கண்டு சொல்வதற்குள் முந்திக் கொண்டு தான். பிறரைக் குற்றம் சாட்ட வைக்கிறது. சுயநலம்தான் ஒளிந்து கொள்ள வைக்கிறது. சுயநலமும் பயமும் இல்லா விட்டால் மனிதர்களின் உலகம் சொர்க்கபுரியாக இருக்கும் என்று எண்ணினான் அவன். . . -

இப்படி எண்ணிய மறுகணமே அவனால் ஒளிந்திருக்க முடியவில்லை. தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொள்ள முடிய வில்லை. பிறர் அகப்படும்போது தான் மட்டும் தப்ப வேண்டும் என்ற முனைப்பு அழிந்தது. அவன் மாடிப்படி களில் விரைந்து இறங்கிக் கீழே சென்றான். அளவு பிசகாமல் அவனது வலிமை மிக்க கால்கள் இரண்டிரண்டு படிகளாகத் தாவி இறங்கின. வேகமாக இறங்கின.